பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயமரியாதை இல்லாத கதந்திரம் 7 போலீஸ்காரர் திருப்தி அடைந்தவராய் பிளாட்பார சுவரில் கால் வைத்தபடியே, சைக்கிளை நகர்த்தி நகர்த்தி, சரோசா பக்கம் போனார். பிறகு அவள் மேஜை மேலே ஒரு கையை ஊன்றிக் கொண்டு, அவளைப் பார்த்தார். சரோசா பேசவில்லை. சிரிக்கக்கூட இல்லை. ஒரு வெள்ளை ரோஜாவை எடுத்து அவர் காக்கிச் சட்டையில் வைத்தாள். அதற்குப் பிறகுதான் இருவரும் சிரித்தார்கள். என்னவெல்லாமோ 'கிககிக பேச்சுக்கள். அவள் யாரைப் பற்றியோ பேசியிருக்க வேண்டும். இல்லையென்றால், போலீஸ்காரர் அவள் பேசப்பேச, அப்படி திரும்பிப் பார்த்திருக்க மாட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, சரோசா அவசர அவசரமாக கடையை எடுத்து வைத்தாள். "கடையை கொஞ்சநேரம் பார்த்துக்கணும்" என்று எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக உத்தரவு போடுவதுபோல் பேசிவிட்டு, போலீஸ்காரரின் சைக்கிளில் பின்னால் ஏறிக் கொண்டாள். அந்தசில்லறைக்கடைக்காரர்களின் தலைகள்போல், சைக்கிள் சக்கரங்களும் சுழன்றன. கீரைக்காரி மாரியம்மாள் கொதித்தாள்: "இப்டியே விட்டுக்குனு போனால், அவன் எல்லாரையும் படுக்கச் சொல்வான். அவள மட்டும் கவனிக்கப்படாது, அவனையும் சேர்த்துக் கவனிக்கணும். தட்டுக்கெட்ட மூதேவியாலே, நம்ம எல்லாருக்குமே ஆபத்து வந்திருக்கு. ருேத்து பார்வதியைக் கடப்பிட்டான்.நாளிக்கு துலுக்கானத்தைக்கூப்பிடுவான்.அப்பாலே சாந்தியைக் கூப்பிடுவான். இந்த சரோசா மூதேவி பண்றதனாலே, அவன், எல்லா ஏழைப் பொம்மனாட்டியும் கூப்பிட்டா வந்திரும்னு நினைக்கான். இந்த நெனப்பை நாம மாத்திக் காட்டணும். அவன் நெஞ்சிலே கீற மஞ்சாசோத்தை எடுத்து, அவன்கிட்டயே தின்னக் கொடுக்கணும். அப்போதான் என் மனக ஆறும்." பேசிய வாய்கள் மூடிக் கொண்டன. வெடித்த எரிமலை சிறிது விட்டுக் கொடுப்பதுபோல.