பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சு. சமுத்திரம் பள்ளத்தைப் பார்த்துப் போனான். ஆனால், சரோசாவோ இப்போது எல்லோருக்கும் பள்ளம் வெட்டிக் கொண்டிருக்கிறாள். அவளைக் கண்டிக்கவும் முடியவில்லை. அவள் சேர்ந்திருக்கும் இடம் அப்படி ஒரு மணி காணாமல் போய்விட்டது. லைட் இல்லாத சைக்கிளில் காக்கி யூனிபாரம் போட்ட ஒருவர் லாகவமாக வந்தார். பிளாட்பாரச் சுவரில் ஒரு கையை வைத்துக்கொண்டு, சைக்கிளை அங்குமிங்குமாக ஆட்டியபடியே கடைகண்ணிகளை நோட்டமிட்டார். ஆஜானுபாகுவான தோற்றம். சைக்கிளின் ஹாண்ட் பாரில் தொங்கிய லத்திக் கம்பு மாதிரி அமைந்த, அழுத்தம் திருத்தமான உடற்கட்டு, குத்துவது போலிருந்த மீசை. குதறுவதுபோல் இருந்த கண்கள். காய்ப்பு ஏறிய கைகள். ஆசாமிக்கு நாற்பது வயது இருக்கலாம். எல்லோரையும் ஒட்டுமொத்தமாக அதட்டினார். "ஏண்டா. சோமாறிங்களா. டிராபிக் இடைஞ்சலாகல.? டேய் சின்னான்! இங்கே ஏண்டா வண்டியை நிறுத்தற. ஒரம் கட்டுடா கயிதே." சின்னானும், அவன் மனைவியும் எதுவும் பேசாமல், வாழைப்பழ வண்டியை முன்னால் நான்கு அடி நகர்த்தி, பிறகு பின்னாலும் நான்கு அடி நகர்த்தி, அதை இருந்த இடத்திலே நிறுத்திக் கொண்டிருந்தபோது - போலீஸ்காரர், செருப்புக்கார சீனனை அதட்டினார். 'என்னடா சீனா குரோம்பேட்டை பாக்டரி வாச்மேன் கிட்டே திருட்டுத்தனமா தோல் வாங்கிறியாம். மாமியார் வீடு கேட்குதா.” "அப்படில்லாம் ஒண்ணும் கிடையாது சாமீ. வாணும்னா வந்து பாரு' என்று சொல்லியபடியே, சீனன் அத்தனை செருப்புக்களையும் எடுத்து, அவர் முகத்துக்கு எதிரே ஆட்டினார்.