பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயமரியாதை இல்லாத சுதந்திரம் 15 உன்னோட சட்டைக்கு இந்த ரோஜா மாட்ச்சாகும்" என்ற குரல் கேட்டது. எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். தாயம்மாவின் பலகைக் கடைக்கு பத்தடி தள்ளி, ஒட்டை மேஜை ஒன்றில், வண்ண வண்ண பூக்களை வைத்தபடி கண்களை வெட்டிக் கொண்டிருந்த சரோசா ஒய்யாரமாகச் சிரித்தாள். இருபத்திரெண்டு வயதுக்காரி. வெளுத்த செவ்வரளி நிறம். சம்பங்கிப் பூவின் சாயல். சாமந்திப்பூக் குவியல் போன்ற அடர்த்தியான தலைமுடி. அவள் பார்வை தாளமாட்டாது வாடிக்கைக்காரர், ராமனை விட்டுவிட்டு, அவள் அருகே போய் நின்று, ஆண்டவனுக்காக பூ வாங்காமல், தன் சட்டைக்கு மேட்சாக ரோஜாப் பூவையும், உதட்டுக்கு மேட்சாக... அவள் கன்னத்தையும் மாறி மாறிப் பார்த்தார்; பார்த்துக்கொண்டே நின்றார். இதற்குள் தாயம்மா,சின்னானை அர்த்தத்தோடு பார்த்தபோது, சின்னான், ராமனைப் பார்த்தான். சரோசா, அந்த வாடிக்கையாளர் சட்டையில் ஒரு ரோஜா இதழை தன் கைபட மாட்டினாள். எல்லோரும் கண்களை சிமிட்டியபடி ஆகாயத்தைப் பார்த்தார்கள். பொதுவாக, ராமனிடம் பூ இல்லாவிட்டால், வேண்டிய பூக்களை, தாயம்மா, ராமனிடமே கொடுத்து வாடிக்கையாளரிடம் கொடுக்கக் சொல்வாளே தவிர, ராமன் கிராக்கியை' கூப்பிடமாட்டாள். ராமனும் இப்படித்தான், ஒரு தடவை பூவோடு பூவாக விற்கட்டும் என்று வாழைப் பழங்களை வாங்கி வைத்திருந்தான். 'வண்டிக்கார சின்னான், 'என்னோட சேல்ஸ் பூடும்பா என்று சொன்னபோது, ராமன், தான் வாங்கிவந்த பழங்களைச் சின்னானிடமே கொடுத்து விட்டான். இப்படி எழுதப் படாத ஒரு தொழில் தர்மம் அங்கே நடந்து வரும்போது, இந்த சரோசா நடந்துகொள்ளும் விதம், அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு வந்தவள். அங்கே கடை போட்டிருந்த, செருப்புக்கடை சீனன், அவளுக்காக இடம் விட்டு,