பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணமும் பெண்மையும். ஊருக்கு சற்று வெளியே பாலத்திற்கு அருகே பெண்வீட்டார் காத்திருந்தார்கள்.நள்ளிரவுநேரம்.பட்டுப்புடவைகளோடும், பகட்டும் நகைகளோடும், பல பெண்கள் ஆரத்தித் தட்டோடு அமர்க்களமாகப் பேசிக்கொண்டு இருந்தபோது, அந்த கல்யாண வீட்டிற்குள் இருந்த ஒரு கிழவி, இன்னும் இழவு வரல. என்று சொன்னதும் ஒரு சில பெண்கள் அந்த அமங்கலியைத் திட்டுவதற்காக தத்தம் இடுப்புக்களில் கைகளை வைத்தபோது, கிழவியின் பேத்தி ஒனக்கு அறிவிருக்கா பாட்டி?. எந்தச் சமயத்துல எந்த வார்த்த பேசணுமுன்னு தெரியவி யே... வயக மட்டும் ஏறிக்கிட்டு போவுது. இதனாலதான் நாயிகிட்டயும் பேயிகிட்டயும், எச்சிக்கலகிட்டயும் இரப்பாளி கிட்டயும் பேச்சு வாங்குற என்றாள். திட்டுவதற்கு முன்னாலேயே பேத்திக்காரி இப்படித் திட்டுகிறாள் என்றால், திட்டிவிட்டால் என்ன பேச்சு பேசுவாளோ என்று பயந்தவர்கள்போல், பெண்கள் பேசாமல் இருந்தார்கள். ஒரே ஒரு எமகண்ட - ராகுகால பதினெட்டு வயதுப் பஞ்சாங்கப் பெண் மட்டும், கிழவியின் அமங்கல வார்த்தையை அகற்ற நினைந்தவளாய் இன்னுமா மாப்பிள்ள வரல?. என்றாள். உடனே ஆண்கள் கோஷ்டியில் இருந்த அவள் அத்தை மகன் 'இன்னா... இருக்கனே. கண்ணு தெரியலியா'... என்றதும் எல்லோரும் சிரித்தார்கள். மாப்பிள்ளையின் ஊர், அய்ம்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருந்தது. அங்கிருந்து மாப்பிள்ளை கோஷ்டி, தென்காசியில் இறங்கி, ஒரு காரை எடுத்துக் கொண்டு வரவேண்டும். ஏற்கனவே