பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணமும் பெண்மையும் 33 அவர்கள் அமர்த்தியிருந்த மேளக்காரர்கள் பஸ்வில் கோணச்சத்திரத்திற்கு வந்து விட்டார்களாம். மாப்பிள்ளை காளில் வந்ததும்,காருக்குமுன்னால்மேளத்தை அடித்துக்கொண்டு அவர்கள் வர வேண்டியதுதான் பாக்கி. கிட்டத்தட்ட நூறுபேர் இருக்கும். பெண்வீட்டு தவில்காரர்கள் மேளக் கம்புகளைத் துாக்கிவைத்துக் கொண்டு தயாராக இருந்தார்கள். சிங்கி அடிக்கிற பயல் கொட்டாவி விட்டுக்கொண்டே, முதுகில் கடித்த கொசுவை, சிங்கியால் அடித்தான். ஊமைக் குழல் வாசிப்பவர் கன்னத்தை உப்பிக் கொண்டிருந்தார். திடீரென்று, கிழவர்கள் நிமிர்ந்து பார்த்தார்கள். வாலிபர்கள் ஓடினார்கள். பெண்கள் குலவையிடுவதற்காக, நாக்குகளை உள்ளே வளத்து, இதனால் மூச்சுவிடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை கோஷ்டிவந்துகொண்டிருந்ததே காரணம். எரியாத மின்சார விளக்குகளை, கியாஸ் விளக்குகள் ஈடுகட்டின. மாப்பிள்ளை வீட்டு நாதஸ்வரக்காரர்கள் ஓரம்போ பாடலை வாசித்தார்கள். உடனே பெண்வீட்டு நாதஸ்வரக்காரர்கள் 'மாப்பிள்ளை வாரார் மாட்டு வண்டியில’ என்ற பாடலை நொறுக்கித் தள்ளினார்கள். இரண்டு மேள கோஷ்டிகளும் சங்கமமாக, பெண் வீட்டாரின் பெரிய மனிதரான ஒரு சின்னக் கிழவர், மாப்பிள்கைக்கு மாலையிட்டு, சந்தனம் பூசினார். உடனே மாப்பிள்ளை வீட்டுமேளம், 'மாமியார்தனமாகவும், பெண் வீட்டு மேளம், 'அடங்காப்பிடாரி மருமகள் மாதிரியும் போட்டி போட்டுக்கொண்டு வாசித்தன. பெண்களின் குலவை, மேளச் சத்தத்தில் கேட்கவில்லை. மாப்பிள்ளை மேளம் மச்சானப் பாத்திங்களா"வை அடித்தபோது, பெண்வீட்டு கோஷ்டி மலை வாழத் தோப்புக்குள்ளே என்று வாசிக்காமல், 'கட்டழகப் பாருங்கடி. காலைப்பிடிச்சுவாருங்கடி என்ற பாட்டை வாசித்தது.