பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. க. சமுத்திரம் 'மாப்பிளை முடுக்கு மேளக் கோஷ்டியும், பெண்க்கார மேளச் செட்டும், தவில்களை அடிப்பதற்குப் பதிலாக, ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்களோ என்று சொல்லும் அளவிற்கு மேளக் கம்பை அடிப்பதுபோல் ஓங்கி, மேளங்களை அடித்ததும், நாதஸ்வரக்காரர்கள், கழுத்தை துாக்கி, வயிறுகளை எக்கி, எதிர்த்தரப்புக் கோஷ்டியை இடிப்பது போல் வாசித்ததும், கல்யாண தரப்புகளுக்குத் தெரியவில்லை. அங்கே உள்ள அத்தனைபேரும் மாப்பிள்ளைக்கு அடுத்தபடியாக, கூட்டம் தன்னை மட்டுமே கவனிப்பதாக, ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி முக்கியத்துவமாக நினைத்ததே காரணம். 'அரங்கு வீட்டில் மேளச்சத்தத்தைக் கேட்டவுடனே, நாணத்துடன் தலை கவிழ்ந்து கொண்டிருந்த மல்லிகாவை, இதர வயதுப் பெண்கள், செல்லமாகத் துாக்கி நிறுத்தி, ஜன்னலுக்கருகே மெதுவாக தள்ளிக்கொண்டுபோய், அதன் கம்பிகளில் அவள் முகத்தை அழுத்தி, "ஒன் ஆச மச்சான நல்லாபாரு... பார்த்தத எங்கிட்டயும் சொல்லு. என்றாள் ஒருத்தி. 'ஏய் மாப்பிள்ளை எப்படி இருக்கார்னு எவளாவது போயி பாத்துட்டு வாங்கடி. என்றாள் இன்னொருத்தி. ‘எப்படி இருந்தா என்ன.. இனும சட்டியா பானையா மாத்தறதுக்கு? என்றாள் மற்றொருத்தி. 'இப்படித்தான் நாம ராசாத்திக்கு ஒரக்கண்ணு புருஷன் கெடச்சான். மாப்பிள்ளையை நல்லா பாக்காம அவனோட சொத்து-பத்த பாத்ததால வந்த கோளாறு' என்று கோளாறு பிடித்த ஒருத்தி தன் அபிலாஷையை செய்தி மாதிரி சொன்னாள். மல்லிகா, பயந்துவிட்டாள். அவள் அண்ணிக்காரி, மாப்பிள்ளையை முன்பே பார்த்துவிட்டு, மாப்பிள்ளைன்னா மாப்பிள்ளை. அவன்தான் மாப்பிள்ளை. ரத்தச் சிவப்பு. கருட்டத் தல...ஏறு நெத்தி. யார்க்கிட்டயும் சிரிச்சுப் பேசுறான். குனிஞ்சதல நிமிறாத பையன்' என்று சொன்னதால், தனக்குள்ளேயே பூரித்துக்