பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணமும் பெண்மையும் 25 கொண்டவள்தான் இந்த மல்லிகா. இருந்தாலும் ஒரக்கண்ணு மாப்பிள்ள' என்றதும், மல்லிகாவுக்கு அண்ணி கடைசியாகச் சொன்ன, குனிஞ்ச தல நிமிறாத பையன்' என்று அப்போது உடலுள்ளே பரிபூரண இன்பத்தை ஏற்படுத்திய வார்த்தை, இப்போது பயமுறுத்தியது. ஒரக்கண்ணா இருந்ததாலதான் குனிஞ்ச தல நிமிறாம இருந்திருப்பானோ. சீ. இருந்திருப்பாரோ. தோழமைப் பெண்களின் சிரிப்பொலி, இடியொலிபோல் கேட்க, மல்லிகா, பயந்தவளாய், ஜன்னல் கம்பிகளை பாதுகாப்பைத் தேடுவதுபோல் பிடித்தபோது, ஒரு பத்து வயது சிறுமி அங்கு வந்து மூச்சிரைக்கநின்றாள்.மல்லிகாவின் பெரியப்பாபேத்தி.மூச்சுவிட்டுக் கொண்டே பேச்சையும் விட்டாள். 'மாப்பிள்ளய பாத்துட்டேன். பாத்துட்டேன்னே..' ‘எப்படி இருக்காரு பிள்ள? அப்படி கேளாதடி. ஒவ்வொண்ணா கேளு. 'நீ மெத்தப் படிச்சவ, நீயே கேளு. கேக்கதாண்டி போறேன். ஏய். கனகு, மாப்பிள்ளை நிறம் எப்படி? 'சிவப்பு "மொகம்' 'உருண்ட' 'பல்லு y 2 'வரிச 'தடியா. ஒல்லியா...' ‘என்னைவிட தடி. ஒன்னவிட ஒல்லி