பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 க. சமுத்திரம் 'இவளமாதிரி தடியா இருந்தால்... அவ்வளவுதான்... வாசலுக்குள்ள நுழைய முடியாது: மொத்தத்துல மாப்பிள்ளை எப்படி? சிறுமி விழித்தாள். இன்னொருத்தி கேட்டாள். 'அழகா இருக்காரா, அசிங்கமா இருக்காரா' "அப்படிக் கேளாதடி. நான் கேக்கேன் பாரு. ஏய், கனகு! மாப்பிள்ளை நம் ஊர்ல யாரு மாதிரி இருக்காருடி.' "யாரு மாதிரியும் இல்ல. 'அப்படின்னா..? "அழகா இருக்கார்: மல்லிகா தவியாய் தவித்தாள். ஒருத்திகடட, கண்ணைப் பற்றி கேக்க மாட்டாளோ?. கண் ஒரக் கண்ணாய் இருந்தால், எல்லா அழகும் அசிங்கமாத் தெரியுமே. மல்லிகா, சிறுமியைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு, அவள் காதருகே வாயை வைத்துக்கொண்டு அவரு கண்ணு எப்படி இருக்கு? என்றாள். சிறுமி சத்தம்போட்டே கத்தினாள். 'உருண்டையா. வெட்டு வெட்டுன்னு இருக்கு.' 'நீ என்னடி கேட்ட?. அவள் என்னடி சொன்னாள்? 'கனகு. சொல்லாத டி. ஒனக்கு மிட்டாய் தருவேன்.' 'நீ மிட்டாய் குடுக்காண்டாம். சீக்கிரமா அவளுக்கு ஒரு புருஷன பெத்துக் குடு: 'பயித்தியம். இசகு பிசகா பேசாம பேச்சே வராது: 'ஏமுழா சிரிக்கிய... ஒரு காலத்துல, ஒண்னுக்குள்ள ஒண்ணு, கண்ணுக்குள்ள கண்ணா. சொத்து பிரியாம