பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணமும் பெண்மையும் 27 இருக்கணுமுன்னு. பத்து வயகப் பையனுக்கு இருபது வயகப் பெண்ண கொடுத்திருக்காவ... தெரியுமா? 'அது ஒங்க வம்முசம்.' ‘எங்க வம்முசத்த என்னத்தழா கண்டுட்ட: பேசிக் கொண்டிருந்த பெண்கள், வாய்களை ஒடுக்கிக் கொண்டு, கண்களை அகல விரித்தார்கள். மாப்பிள்ளை காரில் கனகம்பீரமாக வந்து கொண்டிருந்தான். கைவிரல்களில் மோதிரங்கள். விரல்களின் குவியலில் ஒரு செண்டுப்பூ. சபாரி பேண்ட்... கோட்... மேளதாளத்துடன் கல்யாண கோஷ்டி வாசல்முன் வந்து நின்றது. மல்லிகா, பூரித்துப் போனாள். அவள் மனத்தில் நிழலாடிய ஒரு கற்பனை உருவம்போலவே, அவளுக்கு அவன் தோன்றினான். பி.ஏ. படித்தவன். சென்னையில் வேலையாம். மாப்பிள்ளை, வலது காலை வீட்டுக்குள் வைத்தபோது, உச்சஸ்தாயியில் ஒலிக்க வேண்டிய நாதஸ்வரங்கள், சாதாரண மாகவே ஒலித்தன. ஏற்கனவே போட்டி போட்டு, ஊதிக் களைத்த நாதஸ்வரக்காரர்கள், இப்போது ஒருவருக்கொருவர்உரையாடுவதில் கவனமாக இருந்தார்களே தவிர, ஊதுவதில் அல்ல. 'மாப்பிள்ளய கூட்டிக்கிட்டு வாங்கய்யா. என்றார்.நாவிதர். மாப்பிள்ளை, மணவறைத் தட்டில் போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றை நிரப்பினான். 'சொக்கார-மாரு அலந்தரம் பண்ணுங்கய்யா என்றார் நாவிதர். உடனே மாப்பிள்ளை வீட்டுப் பங்காளிகள் ஒரு தட்டில் இருந்த ஆல இலையைக் கிழித்து, இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு, மாப்பிள்ளையின் தலையைச் சுற்றி மூன்று தடவை கொண்டுபோய், பிறகு இன்னொரு பாத்திரத்தில் போட்டார்கள்.