பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 க. சமுத்திரம் 'முடியாத காரியம்' 'தப்பா நினைக்கப்படாது. ஒங்ககிட்ட மட்டும் இல்ல. எல்லார்கிட்டயும் இப்படி கப்பம் வாங்குறோம்.' 'கப்பமுன்னு சொல்லாம பிச்சன்னு கேளுங்க. தாறோம்.' 'வார்த்தய அனாவசியமாவிடாதிய-அப்புறம்வருத்தப்படுவிய' 'அதத்தான் நானும் சொல்லுறேன்... எங்களுக்கு பிச்ச போட்டுத்தான் வழக்கம். கப்பம் கட்டி பழக்கமில்ல' 'வார்த்த தடிக்குது. நல்லா இல்ல." 'பின்ன என்னய்யா... நாடு கதந்திரமடஞ்க முப்பது வருஷமாவுது. இன்னும். கப்பம் கப்பமுன்னு பேகனா என்னய்யா அர்த்தம்? 'நீங்க கப்பம் கட்டாம. 'கம்மா சொல்லும். கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லப்போறிரு. அவ்வளவுதானே? ஏய். சங்கர். எழுந்திருடா. நாம கப்பங் கட்டி கல்யாணம் பண்ணுற அளவுக்கு மானங் கெட்டவங்க இல்ல' 'ஒம்ம பையன் போயிட்டா ஒண்ணும் கெட்டுப் போயிடாது. ஆயிரம்பையங்க இருக்காங்க..' 'ஆயிரம்பையங்க என்ன, அய்யாயிரம்பையங்களுக்கு ஒரே சமயத்துல வேணுமுன்னாலும் மவராசனா பொண்ண கட்டி வையுங்க. ஏய் சங்கர். இன்னுமாடா. பொண்ண இடிச்சிக்கிட்டு இருக்க? கீழ இறங்குல: மாப்பிள்ளை, கப்பிரமணி உடம்பை நெளித்தான். பெண்ணைப் பெற்றவர், கைகளை நெறித்தார். ஊரைப் பகைக்க முடியாது. கல்யாணக் கூட்டத்தில் ஒருபகுதியினர், கப்பம் கட்டியே தீர வேண்டும் என்பதுபோல் 'எங்க ஊர்ல வாரவங்க.