பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணமும் பெண்மையும் 31 கப்பம் கட்டித்தான் ஆகணும். கட்டித்தான் ஆகணும்...' என்றார்கள். என்ன செய்யலாம். எப்படி சமாளிக்கலாம்... பெண்ணின் அம்மா கிட்டத்தட்ட அழுதுவிட்டாள். கப்பம் கட்டுங்கள் என்று மிஞ்சவும் முடியாது, கப்பம் வாங்காதீர்கள் என்று கெஞ்சவும் முடியாது. 'ஏய் கப்பிரமணி. இதுக்கு முன்னால நீ பொண்ண பார்த்தது இல்லியா? நம்மள அடிம மாதுரி கப்பம் கட்டச் சொல்ற ஊர்ல நமக்கென்னடா வேல.? சீ. கீழ இறங்கு மாப்பிள்ளைக்கு, அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மல்லிகாவைப் பார்த்துவிட்டு, தயங்கி எழுந்தான். மல்லிகா என்னைவிட்டு விட்டுப் போகாதீர்கள் என்பதுமாதிரி அவனை பரிதாபமாகப் பார்த்தாள். அதற்குள், அவளின் கன்னப் பள்ளத்தாக்கில் அருவி நீர் பாய்ந்தது. மாப்பிள்ளை தயங்கித் தயங்கி, மயங்கிமயங்கி மணவறையை விட்டு நகரப் போனான். மல்லிகா, கூட்டத்தைப் பார்த்தாள். நாட்டாமைக்கு கப்பம்கட்டவேண்டும் என்று வாதாடும் அந்த மீசைக்காரன், இதே இந்த மாப்பிள்ளை, தன் அண்ணன் மகளுக்குக் கிடைப்பதற்காக நடையாய் நடந்தவன். தனக்கு வந்த ஒரு சில வரன்களைக்கூட கலைத்து விட்டவன். இப்போது சாமார்த்தியமாக வம்பை வளர்த்து, ஊராரையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு, தன் வாழ்வையே குலைக்கப் பார்க்கிறான். அவன் குலைக்கிறானோ, இல்லையோ, இப்போது ஊர்மானத்தில் தங்கள் மானத்தை ஐக்கியப் படுத்தியது போல், இங்கே நிற்கும் இதே இந்த மனிதர்கள், நாளைக்கு, இந்த நிகழ்ச்சியையே மறந்துவிடுவார்கள். அவள்தான், காலமெல்லாம் இதைக் கலக்கத்தோடு நினைக்க வேண்டியது வரும். அதோடு 'ராசியில்லாதவள். பாதி கல்யாணம் முடிஞ்சு. மீதிக் கல்யாணம் முடியாமப் போனவள் என்று இதே இந்த வாய்கள் பேகம். இதே