பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 க. சமுத்திரம் பந்தலில் இன்னொரு திடீர் மாப்பிள்ளையை, தன்னருகே நினைத்துப் பார்க்கவே கூச்சமாக இருக்கு. அந்த திடீர் மாப்பிள்ளையே... நாளைக்கு, தன்னை ரட்சித்தவன்போல் அலட்டிக் கொள்ளலாம். இழவுக்கு வரும் கூட்டம், என்றும் தாலி அறுப்பதில்லை. பிணத்தைத் துாக்கிப்போகிறவர்கள் பிணத்தோடு எரிவதில்லை. ஒரு பெண்ணுக்கு, தன் எதிர்காலத்தைத் தானே நிச்சயிக்கும் தகுதியும், தைரியமும் இருக்க வேண்டும். ஒரு நாளைய ஆரவாரத்திற்காக, ஒரு பெண் தன் வாழ்க்கையை, சம்பந்தப்படாத பிறர் தீர்மானிக்க அனுமதிக்கலாகாது. ஊர்மானத்திற்காக ஒரு பெண்ணின் மானம் பிரச்னையாகக் கூடாது. அதோடு இந்தக் காலத்தில் கப்பம் என்பது ஆணவமான பேச்சு அதற்கு இசையாத அந்த ஊர்க்காரர்களின் நடத்தை நியாயமே. அதோட ஒரு தடவை. மனதில் கணவனாய் நிச்சயிக்கப்பட்டவனை. பிரிவதென்பது. இதற்குள், மாப்பிள்ளை மணமேடையில் இருந்து குதித்து, மெள்ள மெள்ளவும், பின்னர் வேக வேகமாகவும் நடந்து தனது கூட்டத்தில் சேர்ந்து கொள்ள, அந்த கூட்டமும், வீட்டைவிட்டு நகர்ந்த போது. மல்லிகா, தான் என்ன செய்கிறோம் என்று புரியாமல், மாப்பிள்ளை மாதிரியே மணமேடையில் இருந்து குதித்து, அவனை போலவே நடந்து அந்த கூட்டத்தில் ஒருத்தியாய் சேர்ந்தாள். ஆபத்து காலத்தில் வெட்கம் ஆபத்தானது என்பதை ஏதோ ஒரு உள்ளுணர்வு தோன்றி அவள் வாய் பூட்டை உடைக்கவில்லை என்றாலும், கால் சங்கிலியை கத்திரித்து இருக்க வேண்டும். எல்லோரும் பிரமித்தார்கள். கூட்டம் இரண்டு பட்டது மாப்பிள்ளை கூட்டம். பெண் கூட்டம் என்றில்லாமல், நாட்டாமை கூட்டம், நாட்டாமை எதிர்ப்புக் கூட்டம் என்று பிரிவுபட்டது. பெண் வீட்டு பங்காளிகள் இப்போது உரத்து கூரலிட்டார்கள்.