பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகிகள் ஆதிகேசவன், ஜாயின்ட் செகரட்டரி அந்தஸ்துள்ள அதிகாரி இல்லை. ஆகையால் அவர் அறையில் ஏ.சி. இல்லை. அதேசமயம், அவர், காமா-சோமா குட்டி அதிகாரியுமல்ல. இதனால் அந்த அறையில் வெறும் மின்விசிறிகள் மட்டும் சுழலவில்லை. ஏர்கூலரும், அவற்றோடு சேர்ந்து சத்தம் போட்டது. அவர் வயிற்றை மறைத்து, ஆசாமியை பாஸ்போர்ட் சைஹறில் உருவமாகக் காட்டுவதுபோல், அரைவட்ட மேஜை பளபளத்தது. அதன்மேல இண்டர்காம், இண்டர்னல் டெலிபோன், எக்ஸ்டர்னல் டெலிபோன், பர்சனல் டெலிபோன், அவுட் கோயிங் டிரேய், இன்கமிங் டிரேய், காளான் வடிவிலான டேபிள் லைட், மத்தள வடிவிலான பென் ஸ்டாண்ட், எமர்ஜென்ஸி லைட், டேபிள் பேன், டிரான்ஸ்ஸிஸ்டர் செட், ஸ்கிருப்பிலிங் பேடு போன்ற தவிர்க்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் விதவிதமான நிறங்களில் மின்னின. தரையே இல்லாததுபோன்ற கம்பள விரிப்பு. கவரே இல்லாதது போன்ற வால் பேப்பர். இந்தப் பின்னணியில், தலையே இல்லாதவர் போல், கூட்டு இயக்குனர் ஆதிகேசவன், தலையை, கழுத்தை நோக்கி மடித்துப் போடடு, ஒரு பைலை கொக்கு மாதிரி கண்களால் கொத்திக் கொண்டிருந்ார். அதைப் படித்தாரா பார்த்தாரா என்று சொல்லுவதற்கு இல்லை. 55 வயது மனிதர். எப்போதுமே கழித்திருக்கும் முகம். உயர்ந்திருக்கும் புருவங்கள். சபாரி ஆடைக்குள் சலிப்படைந்த உடல், அந்தச் சுழல் நாற்காலியில் கால்மேல் கால் போட்டு, அந்தப் பைலை, அவர் கவனித்துக் கொண்டிருந்தபோது