பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகிகள் 35 டெலிபோன் மணி அடித்தது. எந்த டெலிபோன் அடிக்கிறது என்பதைக் கண்டறிய, பூனை கருவாட்டைப் பார்ப்பது போல, மோப்பமாகப் பார்த்துவிட்டு, ஒன்றை லபக்கென்று பிடித்துக் கொண்டார். ஆரம்பத்தில் அலட்சியமாக 'யெஸ்' என்று, எதிர்முனையில் ஏதோ ஒருவர் பிச்சைக் கேட்பதுபோலவும், இவர் என்ன வேண்டும் என்று பதிலுக்குக் கேட்பதுபோலவும், பேசினார். பிறகு அலறிப் புடைத்து எழுந்தார். தடுமாறியபடியே பேனாவை எடுத்து, ஒரு தாள்மேல் குத்தியபடியே கத்தினார். அந்தக் கத்தல் தில்லிக்கு டெலிபோன் இல்லாமல் கூட கேட்டிருக்கும். "எஸ். ஸார். நோ வார். எஸ். எஸ். சார். வாட் சார்? ஈவினிங் சார். ஓ.கே. வார். அடடே. நீங்க தமிழ் ஆளா.. என்ன? நீங்கடைரெக்டர் இல்லையா? பி.ஏ.வா. அதுக்கென்ன?. அவசர விவகாரமா வாராரா?. உங்க பேரு?. மிஸ்டர் ராமதுரையா? ஸார். என்னைப்பற்றி கொஞ்சம் நல்லா சொல்லி வைங்கோ. நான் நல்லவனாக்கும். நான் ஒரு ஹலோ. ஹலோ. என்ன? பறந்து வாராரா. வரட்டும். அப்புறம் என்னைப் பற்றி.” டெலிபோன் கட்டாகிவிட்டது. அது தானாய்க் கட்டானதா, அல்லது ஆதிகேசவனின் கய விளம்பரம் தாங்க முடியாமல் பி.ஏ.' ராமதுரையே கட்டடித்து விட்டாரா என்று தெரியவில்லை. இது பற்றித் தாமும் யோசிப்பது போல், ஆதிகேசவன் நாற்காலியில் உட்காரமலேயே, காலைத் துாக்கி நின்றார். சே என்னைப் பற்றி தப்பா நினைச்சிருப்பானோ? யாசகம் கேட்டதா எண்ணியிருப்பானோ, டைரெக்டர் கிட்ட நான் காக்கான்னு அவரு காதில ஊதி என்னை இங்கே இருந்து ஊதித் தள்ளிவிடுவானோ..? முன்ன பின்ன தெரியாத இந்த ராமதுரையிடம் அப்படிக் கெஞ்சியிருக்கக் கூடாது. பொருன்னு சொல்லியிருக்கக்கூடாது.” ஆதிகேசவன், தன்னை வேறுவிதமாக அடையாளப்படுத்திக் கொள்ள எண்ணி, டெலிபோனை சுழற்றிச் சுழற்றி, கடைசியில் வெற்றி பெற்றார்.