பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 க. சமுத்திரம் “ஹலோ... யாரு? ராமதுரையா? நான்தான். அதான் ஆதிகேசவன். சாயின்ட் டைரெக்டர். அப்போ டைரெக்டர், எப்ப மெட்ராசிவேருந்து புறப்படுவார்? என்ன விஷயமா வாராரு? ஓ.கே. சொல்ல வேண்டாம். ஆனா. நான் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. ஏன்னா. நான். நெருப்புன்னா நெருப்பு. அடங்காத நெருப்பு. ஸ்ரைட் பாாவேர்டு. ஆமாம். இம்பார்சியல். டிசிசிவ். ஹலோ. ஹலோ.” டெலிபோன், இப்போது தில்லி முனையில் மூஞ்சில் அடித்தாற்போல் வைக்கப்பட்டது, ஆதிகேசவனுக்கு நன்றாகவே உறைத்தது. அதனால் உடம்பெல்லாம் வியர்த்தது. கைகால்கள் அதிர்ந்தன. ராமதுரை பி.ஏதான். "நம்ம ரேங்குக்கு ரொம்ப ரொம்ப கீழேதான். ஆனா. ரைட்டான எடத்துல ராங்க் செய்யக்கூடிய நிலையில் இருப்பவன். அவனை, மாமா மச்சான் மாதிரி பேரமட்டும் மொட்டையா சொல்லியிருக்கப்படாது. புது டைரெக்டர். அவருகிட்ட என்ன சொல்லப் போறானோ. சே. அப்படி எல்லாம் சொல்ல மாட்டான். ஏன்னா அவனும் தமிழன். அய்யய்யோ.. அதனால்தான் சொல்லுவான். தமிழனுக்குத் தமிழன் இந்த உபகாரமாவது செய்யாமல் இருப்பானா?." ஆதிகேசவனால், மேற்கொண்டு சிந்திக்க முடியவில்லை. அன்றிரவே வரும் டைரெக்டருக்கு ஆவன செய்யணுமே? ஆதிகேசவன், பஸ்ஸரை அழுத்தினார். அந்தச் சத்தம் கேட்டு, 'கிளாஸ் போர் நாராயணன், அலறி அடித்து கைகால்களை பாவவாக் காட்டினானே தவிர, அவன் கால்கள் என்னமோ, மெல்லத்தான் நகர்ந்தன. "இந்தாப்பா, நாராயணா உதவி இயக்குநருங்க, ஏ.ஓ., என்ஜினியர் எல்லோரையும் என் ரூமுக்கு உடனே வரச்சொல்லு. ஒடிப்போய் சொல், ஏய்யா பாராக்குப் பார்க்கிறே. டைரெக்டர் வர்ராரு ஒடிப் போ, ஒடிப்போ"