பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகிகள் 37 டைரெக்டர் என்னமோ, அந்த அலுவலக வாசலுக்குள் வந்தது போல், நினைத்த கிளாஸ்போர் நாராயணன், நிஜமாகவே ஓடினான். (நாராயண் இளைஞன், அதனால் 'இன்னில்’ அறிமுகமாகிறான்) ஆதிகேசவனிடமிருந்து கழற்றிக் கொள்ளும் வகையிலும் ஓடினான். ஆனால், ஆதிகேசவன் அவனை மட்டும் நம்பவில்லை. இன்டர்னல் டெலிபோனில் எல்லோரிடமும் சொல்லிவிட்டு, அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். இன்னும் அவர்கள் வரவில்லையே என்று, கதவைத்திறந்து எட்டிப் பார்த்தார். பிறகு, அவரே வெளியில் ஓடி, ஒவ்வொருவரின் அறைமுன்னால் நின்று, கிராமத்தில் துஷ்டிக்குச்சொல்வதுபோல, டைரெக்டர் வருகையைச் சொன்னார். எப்படியோ, அனைத்து மேனேஜ்மெண்ட் கேடர் அதிகாரிகளும் வந்து விட்டார்கள். அந்த அறையின் பாதி இடத்தை ஆக்கிரமித்த சோபா செட்டில் உட்கார்ந்தார்கள். ஆதிகேசவன், ஒரு துண்டு சோபா நாற்காலியில் சவாரி போட்டார். எதிரே இருந்த நீண்ட சோபாவில் அசிஸ்டெண்ட் டைரெக்டர் இளங்கோவும், இன்னொரு அசிஸ்டண்ட் டைரெக்டர் மைதிலியும் கலியாண ஜோடிபோல் உட்கார்ந்திருந்தார்கள். இருவரும் யூனியன் சர்வீஸ் கமிஷன் மூலம் நியமனமான டைரெக்ட் ரெக்குருட் மென்டகள். முஸொரி டிரையினிங்ல ஒன்றாகச் சேர்ந்தவர்களாம். இந்த இருவரும், மற்றொரு அசிஸ்டென்ட் டைரெக்டர் அருளப்பனை இளக்காரமாகப் பார்த்ார்கள். கிளார்க்காய் சேர்ந்து இந்த ஐம்பத்தியெழறை வயதில் அசிஸ்டென்ட் டைரெக்டரான மனிதர். ஆப்டர் ஆல் 'புரோமோட்டிவ்' அந்த அருளப்பனோ, இந்த இருவரையும் கோபத்தோடு பார்த்தார். ‘காதலிக்கத் தெரியுது. ரூல்ஸ் ரெகுலேஷன்தான் தெரியல. தெரிஞ்சுக்கவும் விரும்பல. ஆனாலும், பயயுள்ளிக நல்லாத்தான் இருக்கு. அவனுக்கு உருளைக்கிழங்கு மாதிரி உடம்புன்னா, இவளுக்கு தக்காளி மாதிரி வடிவம். என் காலத்துல இப்படி ஒரு சங்கதி எனக்குக் கிடைக்கலியே!