பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 க. சமுத்திரம் கூட்டு இயக்குனர் ஆதிகேசவன், எல்லோரையும் கூலாகப் பார்த்துவிட்டுப்பேசினார். ஏலம் போட்டு பேசுவதுபோல் தகவல் சொன்னார். "டைரெக்டர் வர்ராரு... இன்னிக்கு வர்ராரு. நைட்ல வர்ராரு...” “எதுக்காக வாராராம்?” "அதெல்லாம் கான்பிடன்சியல்" "அதாவது உங்களுக்குத் தெரியாதுன்னு சொல்றீங்களா?” மைதிலி, அப்படிக் கேட்டுவிட்டு சிரித்ாள். பின்னர், அந்த சிரிப்பு புன்னகையாக, இளங்கோவின் காதைக் கடித்தாள். அவனும் பதிலுக்கு கிசுகிசுத்தான, "ஒண்னு கிடக்க ஒண்ணு பேசாதே. இந்த கிழம் பொல்லாதது. நீயும் நானும் புரோபேஷன்ல இருக்கோம். இது ரிப்போர்ட் சரியா எழுதினால்தான், நாம பர்மெனன்ட்டாக முடியும்.” 'புரோமோட்டிவ் அருளபயன், கோபத்தை அடக்க முடியாமல், வெற்றிலையைத் துப்பும் சாக்கில் வெளியே போய்விட்டு வந்தார். 'என்ன காதல் வேண்டிக் கிடக்கு.? அதுவும் இந்தச் சமயத்தில. நான் மட்டும் மைதிலி மாதிரி பேசியிருந்தா, இந்த ஆதிகேசவன் சும்மா இருந்திருப்பாரா? தாளிச்சிருக்க மாடடார்,? நேரடி நியமன உதவி இயக்குநர்கள் என்றால், பாஸுக்குக் கூட பயம். பொண்ணுன்னா பொட்டப் பயலுக்குக் கூட சகிப்புத்தன்மை. சே. சே. என் சர்வீசில இப்படி ஒரு. வெற்றிலையைத் துப்பிவிட்டு உள்ளே வந்த அருளப்பனை ஆதிகேசவன் அதட்டினார்: "கான்பரன்ஸ்ஸுக்கு வெற்றிலையோடு வரப்படாதுன்னு எத்தனவாட்டி சொல்றது மிஸ்டர்?"