பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகிகள் 41 "எஸ். ஸார். கனகா என்னோட பெஸ்ட் பிரண்ட் ஸ்ார். எதெற்கெடுத்தாலும் என்கிட்டதான் சந்தேகம் கேட்பாள். நான் போய் ரிசர்வ் செய்திட்டு வரேன் சார். எதுக்கும், மிஸ்டர் இளங்கோவனையும் என்னோட அனுப்புங்க சார். அவருக்கும் அந்தக் கனகா டிரைனிங் மேட்” அருளப்பன், தன்னையறியாமலே நாற்காலியில் உடம்பைச் சாய்த்து, பேசினார் “என்ன மேட்டோ இருந்துட்டு போகட்டும். நீ ஒருத்தி போதாதம்மா.. அகாய சூரியாச்சே. மிஸ்டர் இளங்கோவிற்கு ஜே.டி., வேற ரெஸ்யான்சிபிலிட்டி கொடுப்பார். நீ மட்டும் போ. இந்த ஏ.ஓ. சொன்ன ரூல்ஸ்ல ஒடிச்கப் போடறது மாதிரி ரிசர்வ் பண்ணிட்டு வந்துடு.” மைதிலி, தயங்கித் தயங்கிப் போனாள். இளங்கோவிற்கு, இருப்புக் கொள்ளவில்லை. காதலியைப் பிரித்த காதகனான அருளப்பனை கண் குத்திப் பார்த்தான். பிறகு அந்தக் கூட்டத்தில் ஏதாவது கேளாறு செய்ய வேண்டும் போல் இளங்கோவிற்கு தோன்றியது. செய்யவும் துவங்கினான். "சார். சார். டைரெக்டர் எந்த பிளைட்ல வாரார்?" "என்ன கேள்வி மிஸ்டர்? டில்லி பிளைட்தான்" 'டில்லியில் ரெண்டு பிளைட் இருக்கு... ஒன்று சென்னைக்கு நேரா வருது. இன்னொன்ரு ஹைதராபாத் வழியா வருது. இதுல எந்த பிளைட்ல வருவாருன்னு தெரியுமா?" "அடக் கடவுளே." இளங்கோ விடவில்லை. “எனக்குத் தெரிஞ்சு புது டைரெக்டர் ஹரிசிங், ரயிலுல வரத்தான் ஆசைப்படுவாரு... எங்க முலொரி டிரையினிங்கல