பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 க. சமுத்திரம் இந்தச் சமயத்துல நிர்வாக அதிகாரியான ஏ.ஓ., ஒரு ஆட்சேபனையைக் கிளப்பினார். அதற்காகவே பிறந்த மனிதர்போல், அவர் மோவாயும் மூக்கும் கேள்விக்குறி வடிவத்தில் இருக்கும். "சேப்பாக் கவர்ன்மெண்ட் கெஸ்ட் ஹவுசில தங்கணுமுன்னா, டூர் வருகிற அதிகாரி ஸ்டேட் கவர்ன்மென்ட் செகரட்டிரி அந்தஸ்துல இருக்கணும். நம்ம டைரெக்டர், டெபுடி செகரட்டிரி ரேங்தான். அவருக்கு ரூம் கிடைக்காது. அதனால முயற்சி செய்யக்கூடாது.” சின்னஞ்சிறுககளான அசிஸ்டென்ட் டைரெக்டர்களைப் பார்த்து ஒருவித தாழ்வு மனப்பான்மை கொள்ளும் புரமோட்டி அருளப்பன், இருத் நிர்வாக அதிகாரியை பார்க்கும் போதெல்லாம் தன்னைப் பற்றியே கொஞ்சம் கொண்டாட்டமாக நினைப்பவர். ரகசியமாக இரண்டு வெற்றிலையில் கண்ணாம்பைத் தடவினார். இந்த ஏ.ஓ.வை விடப்பாடாது. ஜி.பி.எப் அப்ளிகேஷனை எவ்வளவு நாளா வச்சிக்கிட்டு இருக்கான்? "என்ன.ஏ.ஓ.சார்? எப்போ பார்த்தாலும் அப்ஜக்ஷன்தானா? இடையில இப்படிதும்மப்படாது.கெஸ்ட் ஹவுஸ் ஆபீசருக்கு நீங்க சொல்ற ரூல் தெரியாது. அவருக்கு டெலிபோன் செய்தே சொல்லிக் கொடுப்பீங்கபோலிருக்கே? அந்த பப்ளிக்டிபார்ட்மென்டல அன்டர் செகரட்டரியா இருக்கிற ஐ.ஏ.எஸ் கனகா, நம்ம மைதிலியோட முசெளரியில... டிரயினிங் படிச்சவள். இவங்கள அனுப்பினா, ரிசர்வேஷன் சிலிப்பை கையோட வாங்கிட்டு வந்துடுவாங்க." மைதிலிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இந்த ஆதிகேசவ அசடுவிடம், நல்ல பெயருவாங்குவதற்கு ஒரு சான்ஸ், புரபேஷன். புரோமோஷனாக ஒரு வாய்ப்பு. விடப்படாது. அந்த கனகா திமிரு பிடிச்சவள்தான். ஆனாலும், கையில காலிலே விழுந்து அந்த ஐ.ஏ.எஸ். திமிருக்கு சலாம் போட்டு, அனுமதி 'சிலிப் வாங்கி ஆகணும்.