பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகிகள் 45 "சார். இப்ப ஆக வேண்டிய வேலையை கவனிக்கலாம்.” "ஒ. கே. ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு குரூப் போகட்டும். ஏர் போர்ட்டுக்கு ஒரு குரூப் போகட்டும். எங்கே வராரோ அங்கே பிக்கப் செய்யலாம். அப்புறம் ஏ.ஓ! ஒங்களைத்தான். நாளைக்கு எல்லாரையும் ஆபீசுக்கு வழக்கமாக வர நேரத்தில் வரச் சொல்லுங்க...” “நாளைக்கு ஹாலிடே சார். நல்ல டேயிலேயே வரமாட்டாங்க” டேய் என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாய் சத்தம் போட்டு உச்சரித்த நிர்வாக அதிகாரியை நோக்கி ஆதிகேசவன், கண்டிப்புடன் சொன்னார். "நாம் மானேஜ்மென்ட் கேடர். நமக்காகத்தான் அவங்க இருக்காங்களே தவிர, அவங்களுக்காக நாம் இருக்கல. மானேஜ்மென்ட் கேடர் எப்போ கூப்பிட்டாலும் வரணும். சரி, மிஸ்டர் ஏ.ஓ.! உங்க பட்டாளத்த கூப்பிடுங்க” நிர்வாக அதிகாரி, டெலிபோனில் எதையோ பேசினார். பத்து நிமிடத்திற்குள் நான்கைந்து கிளார்க்குகள் பறந்து வந்தார்கள். அவர்கள் உட்கார இடம் இருந்தாலும், உட்காரவும் இல்லை. மானேஜ்மென்ட் கேடர் அவர்களை உட்காரவும் சொல்லவில்லை. இளங்கோ, அவர்களிடம் ஏதோ சொல்லப் போனான். பிறகு 'கிளாஸ் திரிகளிடம் மேஸ்திரி மாதிரியான நிர்வாக அதிகாரிதான் பேச வேண்டுமே தவிர, அசிஸ்டன்ட் டைரெக்டர்பேசுவது கெளரவக்குறைவு என்பதுபோல் பேசமாமல் இருந்தான். எவரும், அந்த கிளார்க்குகளை முகம்பார்த்து நோக்கவில்லை. ஆதிகேசவன் கூட, ஏ.ஓ.வைப் பார்த்து, சொல்லுங்கள் என்பது மாதிரி கண்களால் சொன்னார். அந்த நிர்வாக அதிகாரியும், அவர்களுக்கு என்னவெல்லாமோ சொன்னார். ஒவ்வொருவருக்கும் ஒரு கெஸ்ட் அவுஸ் ரிசர்வ்