பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சு. சமுத்திரம் செய்ய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. சிலர் விமான நிலையத்திலும், ரயில் நிலையத்திலும எடுபிடிச் சாமான்களைத் துாக்குவதற்காக நிறுத்தி வைக்கப் பட்டார்கள். அப்படியும் இப்படியுமாய் ஒரு சினிமா பட நேரம் முடிந்தது. ஆதிகேசவன், எவரையும் வெளியே அனுப்பவில்லை. தேநீர் குடிக்கக்கூட விடவில்லை. அசிஸ்டென்ட் டைரெக்டர் அருளப்பன், எஞ்ஜினியர் ராமு இரண்டு கிளார்க்குகள், இரண்டு கார்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டார்கள். ஆதிகசவன் இளங்கோவைப் பார்த்து போகலாமா என்பது போல், பார்த்தால் இளங்கோ ஏடாகோடமாய் பதிலளித்தான். "இந்த டெல்லி பிளைட்டே சரியான டைம்முக்கு வரதில்லை சார் எதுக்கும் டெலிபோனில பிளைட் டைமை செக்கப் செய்துட்டு போகலாம் சார்” "நீ வேற... இங்கே இருக்கிறத அங்கே இருப்போம். டெலிபோன்ல அவன் ஏதாவது சொல்ல, நாம் அத நம்ப, கடைசில நம்ம நம்பி வர்ர டைரெக்டர் திரிசங்குவா ஆயிடுவார். நத்திங் டூயிங். புறப்படு.” சென்னை விமான நிலையத்திற்குள் வந்த ஆதிகேசனும், இளங்கோவும், மூன்று கிளார்க்குகளும், பிளைட் நேரம் காட்டிய தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தார்கள். இரண்டு விமானங்களும், இரண்டு மணிநேரம் லேட். இளங்கோ ஆதிகேசவனை, குற்றவாளி போல் பார்த்துவிட்டு, பிறகு முகத்தை வேறுபுறமாக திருப்பிக் கொண்டான். அப்போது ஆதிகேசவனுக்கு ஒரு திடீர் எண்ணம். "இந்தாப்பா இளங்கோ. சென்ட்ரல்ல டிரயின் வர்ர சமயம் இது. நானும் ஏ.ஓ.வும் அங்கே போய் அவரைப் பார்த்துவிட்டு வந்துடுறோம். பிளைட்க்கு முன்னால வந்துடுவோம்.”