பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகிகள் 47 "சில சமயம் பிளேன் கொஞ்சம் சீக்கிரமாகவும் வரலாம் சார்” 'அதனால என்ன? உனக்குத்தான் டைரெக்டரு முசெளரியிலேயே தெரியுமே. அவரை வரவேற்று எப்படியோ பேசிக்கிட்டே இரு. நாங்க வந்துடறோம். ஒருவேளை ரயிலில் வந்தால் ஏ.ஓ.வ. உன்கிட்ட அனுப்பி வைக்கிறேன்.” ஆதிகேசவன், நிர்வாக அதிகாரியுடன் ஒடிவிட்டார். இளங்கோ தேள்கடி திருடன் போல் விழித்தான். எப்படி இந்த டைரெக்டரை, பயணிகள் வெள்ளத்தில் கண்டுபிடிக்கிறது? முட்டாள்த்தனமா அவரைத் தெரியுமுன்னு வேற பெருமை அடிச்கட்டேன். இளங்கோ, அங்குமிங்குமாக அலைந்தான். அந்த விமான நிலையத்தில் கம்பிகளில் பொருத்தப்பட்ட ஒரு பிளாஸ்டிக் நாற்காலி யில் உட்கார்ந்தான். தொலைக்காட்சி அறிவிப்பைப் பார்த்தான். கண்ணாடிக்குள் வைக்கப்பட்டநாகரீகப்பொருட்களைப்பார்த்தான். செக்யூரிட்டி ஆசாமிகளின் சட்டைப் பட்டன்களை எண்ணினான். அவர்களின் துப்பாக்கிகளுக்குள் எத்தனை ரவை இருக்கும் என்று கணக்குப் போட்டான். பிறகு, இதுவும் போததென்று சக அதிகாரியான மைதிலியிடம் பட்டும் படாமலும், தொட்டு தொடாமலும்கூத்தடித்த நிகழ்வுகளை கண்முன்னால் நடப்பதுபோல் மீண்டும் புதுப்பித்துக் கொண்டான். எப்படியோ ஒரு மணி நேரத்தை ஒட்டிய பிறகு தற்செயலாகத் திரும்பினால், எதிர்த்திசையில் எலிவேட்டரில், பொம்மைகள் போல் மனிதர்கள் ஆடாமல் அசையாமல் நின்றார்கள். பிறகு கீழ்நோக்கி நகர்ந்தார்கள். அடடே. தில்லி பிளைட் வந்துடுச்சே. இளங்கோ, விமான தளத்திற்குள் சுழன்று சுழன்று செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பெட்டிகளை எடுக்கப் போன மனிதர்களையும், கையில் பெட்டிகளை வைத்துக் கொண்டு