பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 க. சமுத்திரம் நேராய் வாசலுக்குப் போனவர்களையும் விட்டுவிட்டுப் பார்த்தான். இந்த டைரெக்டர் எப்படி இருப்பான்? சர்தார்ஜியா? இல்ல பஞ்சாபியா? இல்ல ராஜஸ்தானியா? கருப்பா, சிவப்பா? இளங்கோ, ஒவ்வொரு பயணியாக உற்றுப் பார்த்தான். மாலை போட்டு வரவேற்கப் பட்டவர்களையும், கட்டித் தழுவி எதிர்கொண்டு அழைத்தவர்களையும் விட்டுவிட்டு, பே' என்று தனியாக யாரும் நிற்கிறார்களா என்று பார்த்தான். ஒரு பேயிடம்' போய் 'ஆர் யூ ஹரி சிங்?" என்றான். அவர் முறைத்த முறைப்பில் வேறுபக்கம் போனான். எந்தப் பேயும் அங்கே இல்லை. ஒரு வேளை வெளியே போய் ஹரிசிங் நிற்கலாம் என்று ஓடினான், ஓடினான். விமான வழி வாசல் ஓரத்திற்கே ஓடினான். இதற்குள் இன்னொரு சத்தம், திரும்பிப் பார்த்தால், இன்னொரு தில்லி விமானம். எலிவேட்டரில் பழைய பயணிகளே, கீழ்நோக்கிப் போய் மேல் நோக்கி வருவதுபோல் இருந்தது. ஒரே மாதிரியான சர்தார்ஜிகள். ஒரே மாதிரியான பைஜாமாக்கள். பொதுப்படையான புடவைகள். இங்கிலீஸ் கலர் பெட்டிகள். இளங்கோ மீண்டும் அவர்களைச் சல்லடை போட்டான். எவரும் தனித்து நிற்கவில்லை. அங்குமிங்கும் பார்க்கவில்லை. இளங்கோ பயந்து போனான். ஆனாலும் லேசாக நிம்மதி. ஆசாமி, ரயிலில்தான் வந்திருப்பார். ஆதிகேசவன் அவரைப் பிடித்திருப்பார். எனக்கு வேலை மிச்சம். - இளங்கோ, கால்மணிநேரம் இளைப்பாறுகிறவன் போல், கால் மேல் கால் போட்டு, கச்சிதமாக இருந்தான். அப்போது, ஆதிகேசவன், நிர்வாக அதிகாரியுடனும், மூன்று கிளார்க்குகளுடனும் ஒடோடி வந்தார். வரும்போதே பேசிக் கொண்டு வந்தார். "இளங்கோ. இளங்கோ. டைரெக்டர எங்கேப்பா வச்சிருக்கே? அதிக நேரமா காத்திருக்காரோ?” இளங்கோ ஆதிகேசவனை பார்க்க முடியாமல் பார்த்தான். பிறகு தட்டுத்தடுமாறி சமாளித்தான்.