பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்க முடியாத கதை அந்த மாலை நேரம், குரங்குகை மாலையாக கசங்ககிக் கொண்டிருந்தது. குமுதினியின் அறைக்குள் ஒவ்வொருத்தியாக வந்து உட்கார்ந்தார்கள். கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகள் இருப்பதுபோல் அந்த மாணவிகளும், பல்வேறு வண்ணத் தோரணங்களாய் வந்தார்கள். ஒரே கூட்டம். அந்த மகளிர் கல்லூரி விடுதியிலும் ஒருதொலைக்காட்சிப்பெட்டி இருந்தது. ஆனால், அது ஒட்டை உடைசல், குமுதினியிடமோ அழகான வண்ணப்பெட்டி இருந்தது. குமுதினி சிரித்தபடி, அத்தனை பெண்களையும் வரவேற்பது போல், இருக்கைகளை நகர்த்திப் போட்டாள். அந்த அறை, திரையரங்காகியது. வசதியாக உட்கார்ந்திருந்த ஒரு வெடிவால் தாவணி, "குமு! கதவைச் சாத்தட்டுமா? இதுக்கு மேல் கூடடம் தாங்காதுடா” என்றாள். குமுதினி சிரித்தபடியே சொன்னாள்: "அப்படிக் கதவைச் சாத்துறதாய் இருந்தால், முதல்ல, நான்தான் அறைக்கு வெளியே நிற்பேன்.” அப்போது வாசலுக்குள் நுழைந்த தமிழ்ப் பட்டப்படிப்பு இரண்டாவது ஆண்டுக்காரி ஒருத்தி, வெடிவால் மங்கையைச் செல்லமாகவும், சீண்டுவது போலவும் கேட்டாள். 'இடுவார் பிச்சையைக் கெடுவார், கெடுப்பாராம். ஒனக்கென்ன வந்திருக்கு?