பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 க. சமுத்திரம் "ஏய், வாயை அடக்கிப் பேகடி.” 'சரி, நீ கெடுவாளாயே இருந்துட்டு போ. இரண்டு பெண்களும், ஒருவரை ஒருவர் சக்களத்திகள் மாதிரி பார்ததபோது, அரசி, ஆண்டாள், மல்லிகா, செண்பகம், பாமா, வடிவு, விமலா, கமலா, கஸ்துாரி ஆகிய மற்றப் பெண்கள், அவர்களையே தொலைக்காட்சிப் பிம்பங்களாய் நினைத்து ரசித்தார்கள். குமுதினி, சண்டைக் கோழிகளை அமைதிப்படுத்தினாள். "ஏன் இப்படிக் கதைக்கிறிங்க? இங்கே யாரும் யாருக்கும் பிச்சை போடல. நம்மோட பேச்சுக்கள் எல்லாம் காகிதத் தோட்டாக்கள்தான். ஆனாலும், அந்தக் காதிகம் அட்டைக் காகிதமாய் அழுத்தமாய் ஆகிடக்கூடாது.” எல்லாப் பெண்களும், அவளை அதிசயித்துப் பார்த்தார்கள். பொருளாதாப் பட்டப் படிப்பில் இறுதியாண்டு. ஏதோ உச்சியில் இருந்து, கனைநீர் உள்ளுறக் கொட்டிக் கொண்டிருப்பது போன்ற குளுமையான முகம். சிவப்பும் கருப்பும் சந்தித்து, தங்களது 'சந்ததி” நிறத்தைப் பரீட்சார்த்த ரீதியில் உருவாக்கிய கருஞ்சிவப்பு. உடைமேல் உடை வைத்ததுபோல் இருந்த பல பெண்களுக்கு மத்தியில், உடைக்குள், உடலே தெரியாமல் இருப்பவள். அந்தப் பெண்கள், அதற்காக அவளை அதிசயித்து நோக்கவில்லை. அவள் அழகால் ஏற்படும் இயல்பான இலைமறை காய்மறைவுப் பொறாமையையும் மீறிய அன்புப்பார்வை, சூது என்பதே இனிமேல் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதுபோல், பேகம் பேச்சு; வாயில் சென்னைத் தமிழைச் சின்னதாக்கும் இலங்கைத் தமிழ். அவளையே, சொல்லி வைத்ததுப் போல் பார்த்த அத்தனை பெண்களும், வாசலில் சத்தம் கேட்டுக் கண்களைத் திருப்பி காதுகளைச் சாய்த்தார்கள். நாணம் கலந்த பார்வையோடு சித்திராவும், இன்னும் நான்கைந்து பெண் பட்டாளமும் உள்ளே வந்தது. சித்திரா, பையிலிருந்த அழைப்பிதழை எடுத்து, குமுதினியிடம் நீட்டினான்.