பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்க முடியாத கதை 55 பெட்டியில் வண்ணம் போய், வெண்மை வந்தது. உடனே நேரத்தைக காட்டும் 20-20-50, அப்புறம் 50-51.60. பிறகு வட்ட வட்டமான உள்வட்டங்களைக் கொண்ட ஒரு பெரிய வட்டம். “வணக்கம் இன்றைய தலைப்புச் செய்திகள்: 'இலங்கையெங்கும், குறிப்பாக கொழும்பு நகரில் நூற்றுக்கணக்கான தமிழர்கள், சிங்களவர்களால் கொல்லப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கொலை வேகம் குறையவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.” குமுதினி, தன்னை அறியாமலே எழுந்தாள். அந்தக் கொலைகள், அந்தப் பெட்டிக்குள்ளேயே நடப்பதுபோல், அதை விரோதித்துப் பார்த்தாள். துக்கித்துக் கேட்டாள். கேட்கக் கேட்கக் காதுகள் சிவந்தன. பார்க்கப் பார்க்கப் பரிதவிப்பு: பதினைந்து நிமிடச் செய்தி வாசிப்பில், பத்து நிமிடங்களுக்கு மேல், இலங்கை. இலங்கையில் இனப்படு கொலைகள். வாசிப்பாளரே. அரண்டும், மிரண்டும், அழுவது போலவும் படித்தார். கொழும்பில் மட்டும், நூறு பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்களாம். ராணுவம் இந்தக் கொலைகாரச் செயலில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறதாம். ஊரடங்கு உத்திரவாம். பத்திரிகைத் தணிக்கையாம். பெண்கள் கற்பழிப்பாம். தமிழ்க் குழந்தைகள் நெருப்பிலாம். தெருக்களில் ஒரே பிணக் குவியலாம். விமானப் போக்குவரத்து ரத்தாம். தொலைதகவல் தொடர்புத் துண்டிப்பாம். துப்பாக்கிச் சூடுகளாம். குமுதினி நடப்பது தெரியாமல் நடந்து, அந்தத் தொலைக்காட்சிப்பெட்டிமேல் சாய்வது தெரியாமல் சாய்ந்தபோது, பெட்டியின் மேல்முனையில் இரண்டாகவிரிக்கப்ட்ட திரைத்துணி, மீண்டும் தொங்கி இழவுச் செய்திகளைச் சொன்ன திரையை மறைத்தது. அதுவரையில் செய்திகளை சிறிது துணுக்குற்று கேட்ட மாணவிகள், அப்போதுதான், குமுதினிக்கு ஒருவேளை