பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 க. சமுத்திரம் ஏற்பட்டிருக்கக்கூடிய ஈடு செய்ய முடியாத இழப்புகளை உணர்ந்தவர்கள்போல் ஒடிப்போய், அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். அவளோ, அவர்களையும் மீறி, அடித்துப் புரண்டாள். கொழும்பில் நடுத்தர தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளரான அவள் தந்தையும், தாயும், தம்பியும், தங்கையும், சிங்களவர்கள் அதிகமாக வாழும் நகர்ப்பகுதியில் ஒற்றைக் குடும்பமாய் இருப்பவர்கள். அவளைக் கைப்பிடிப்பதாய் இருக்கும் காசிநாதன், அதற்கு அடுத்த தெருவில், பொறியாளனாக இருப்பவன். "என்ன ஆனார்களோ?” - குமுதினி வாய்விட்டுக் கதறினாள். "அப்பா! அம்மா! ஒங்களையும் தம்பி, தங்கைகளையும் நான் உயிரோடு பார்ப்பேனா? பார்க்க முடியுமா. காசி, என்னோட காசி. அப்பா, அம்மம்மா, என்னை விடுங்கடி, விடுங்கடி.” கல்லூரிக் கட்டிடமே அதிரும்படி குமுதினி கத்தினாள். அந்த விடுதியில் உள்ள அத்தனை பெண்களும் ஓடிவந்தார்கள்.ஒரே அமளி. ஒரே பரபரப்பான படபடப்பு. நளினி மூர்ச்சித்தவளாய்த் தரையில் வீழ்ந்தாள். எவளோ ஒரு பெண், சமயோசிதமாக, அவள் முகத்தில் நீரைத் தெளித்தபடி, "காற்று வேணும் கொஞ்சம் வழி விடுங்க” என்றாள். குமுதினியே அங்கு மரித்துவிட்டதுபோல், மாணவிகள் 'ச்சொ, ச்சொ என்றார்கள். இறுதியில் அங்கே ஓடிவந்த விடுதிச் செயலாள மாணவி தமயந்தியும், சித்ராவும், குமுதினியைத் துாக்கி நிறுத்தினார்கள், சித்ரா, அவளை, தன் தோளில் சாய்த்துக் கொண்டாள். 'என்ன விஷயம் என்பதுமாதிரி ஒருத்தியை, வினாக்குறியுடன் அவள் பார்க்க, அவள் விளக்கினாள். விளக்கும்போதே அழுதுவிட்டாள். அழுதவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குமுதினியும் அழுதாள். இறுதியில் செயலாளப் பெண், நளினிக்கு ஆறுதல் கூறினாள். "என்ன குமுதினி குழந்தைமாதிரி. ஒன்னோட நல்ல குணத்துக்கு ஒன் குடும்பத்துலே யாரும் செத்திருக்க மாட்டாங்கம்மா. நிச்சயமாய் நம்புடி"