பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்க முடியாத கதை 57 குமுதினி, தன்னைப்போலவே அழுதுக் கொண்டிருந்த சித்ராவின் மார்பில் முகம் புதைத்தாள். பிறகு, "நான் எப்படியோ? என்னேடா அம்மா, அப்பா குணத்தோட ஒப்பிட்டால் நான் துாகடி, துாக. என்ன ஆனாங்களோ? அவங்களோட பிணத்தையாவது நான் பார்ப்பேனா.” என்றாள். "அபத்தமாய்ப் பேசப்படாது. வேணுமுன்னாப் பாரேன். அவங்களுக்கு எதுவும் ஏற்பட்டிருக்காது.” "ஏய் சித்ரா என்னை இப்பவே கொழும்புக்கு அனுப்புடி.என் பெற்றோரை நான் பார்த்தாகணும். என் தம்பி, தங்கை கிட்டப் பேசியாகணும். இப்பவே பார்க்கணும் இப்பவே பேசனும் என்னை அனுப்புடி, அப்படியே அவங்களுக்கு வந்தது எனக்கும் வரட்டும். எனக்கும் வரணும். தமயந்தி என்னைக் கூட்டிட்டுப் போடி. "ستيواتية மாணவிகள் மெளனித்தார்கள். அத்தனை கண்களும் மேகமாயின. அவளுக்கு எப்படி ஆறுதல் சொலவதென்று புரியவில்லை. அப்பா செத்தால் அம்மாவைக் காட்டலாம், அம்மா செத்தால் அப்பாவைக் காட்டலாம். இருவரும் செத்தால் குடும்பத்தில் எஞ்சியவர்களைச் சுட்டிக் காட்டி, ஆறுதல் கொடுக்கலாம். அந்தக் குடும்பமே ஒட்டு மொத்தமாய் செத்தால்..? தமயந்தி தன் ஆழுகையை அடக்கியபடியே ஆற்றுவித்தாள். "அழாதே குமுதினி, அழாதே! தொலைக்காட்சியிலே கூறப்பபடுகிறதுன்னுதானே சொல்லி இருக்காங்க? "அரசாங்கச் செய்தியிலே கூறப்படுதுன்னு சொன்னால், இலங்கையில கூற்றுவன் கூத்தாடுறான்னுதானடி அர்த்தம்? நாலைஞ்சு நாளாவே பதட்ட நிலை இருக்குதுன்னு செய்தி வந்துதே. சிங்களவங்க, ஐந்து வருஷமாய் தமிழர்களோட வீடுகளுக்குள் புகுந்து, எல்லாப் பொருளையும் கொள்ளையடிச்சு