பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 க. சமுத்திரம் கொள்ளையடிச்சு பழக்கப்பட்டுப் போனாங்க. இப்போ எம் ஆட்களோட உயிரையே கொள்ளை அடிக்கிறாங்களே.” உள்ளத்தால் செத்து, உடலால் மட்டுமே அங்கே இருப்பவள்போல் உணர்வற்று கிடந்தாள் குமுதினி. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒவ்வொரு பெண்ணாக அகன்றார்கள். இறுதியில், சித்திரா மட்டுமே நின்றாள். வெளியே ஏதோ சத்தம் கேட்டு நகரப் போனவளை, குமுதினி திடீரென்று பாய்ந்து பிடித்துக் கொண்டாள். "எனக்குப் பயமாய் இருக்கு. என்னை விட்டுட்டுப் போயிடாதே" என்றாள். "இந்த நிலையில் ஒன்னை விட்டுட்டுப் போனால், எனக்கும் சிங்களவங்களுக்கும் என்ன வித்தியாசம்?” "நான் யாருக்காக அழுறது? அப்பாவுக்கா. அம்மாவுக்கா. தம்பிக்கா. தங்கைக்கா... என்னோட காசிக்கா. யாருக்காகடி அழுறது? இவங்க எல்லாம் உயிரோட இருந்து, அவங்கெல்லாம் எனக்காக அழுதால்கூடப் பரவாயில்லே. ஒருத்திக்காக பலர் அழலாம். பலருக்காக ஒருத்தி அழமுடியுமாடி?” "என்னம்மா நீ. கற்பனையும் பயமும் ஒண்ணாயிட்டால் நாம் வேரில்லாமல் போயிடுவோம். நடந்திருக்காத ஒன்றை நடந்ததாய் அனுமானிக்கிறது பெரிய தப்பு:” குமுதினி, குழந்தையாய்க் கேட்டாள். "சித்ரா, அப்படியா சொல்றே? எங்க குடும்பத்துல யாரும் இறந்திருக்க மாட்டாங்கன்னு சொல்றியா?” "ஆமாம். என் மனகல ஏதோ ஒண்னு ஒனக்கு எந்த இழப்பும் நடந்திருக்காதுன்னு சொல்லுது.” 'நீ சொன்னது மாதிரியே இருக்கட்டும். என்னோட காசிநாதனுக்கும் எதுவும் நடந்திருக்காதே?” “எதுவும் நடந்திருக்காதும்மா. நீ என்னை நம்புடி.”