பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்க முடியாத கதை 59 "நிசமாவா?” "நிசமாவே என் வாக்கு எப்பவுமே பொய்த்ததில்லை." குமுதினி, சித்திராவை மாணவி மாதிரி பார்த்தாள். ஆசிரியையாக அனுமானித்தாள். யோகியாக நினைத்தாள். முக்காலமும் தெரிந்த முனி புங்கவப் பெண்ணாய் எண்ணினாள். அவள் கரத்தைப் பலமாகப் பிடித்துக்கொண்டாள். அவள் தோளில் வலுவாகச் சாய்ந்து கொண்டாள். இரவில் இரு பெண்களும் தூங்கவில்லை. சித்திராவின் கையைப் பலமாகப் பிடித்தபடி, அங்குமிங்குமாய் புரண்ட குமுதினி, திடீர் திடீரென்று எழுந்தாள். கவரில் சாய்ந்தாள். தரையில் அமர்ந்தாள். அறைக்குள் தாவித் தாவி நடந்தாள். மனப்புவனில், அம்மா முதலில், அப்புறம் அப்பா, பிறகு தம்பி, ஒரு தங்கை, இறுதியில காசிநாதன். இந்த நினைவுகள் வகைவகையாய் மாறி மாறி, முன்னும் பின்னுமாய் வந்தன. ஐந்து உடல்களும் சிதைந்து, சீரழிந்து, ஈமக்கடனுக்காக இன்னும் துடித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை, அவர்களின் அவயங்கள் தனித்தனியாய்ச்சிதறிக்கிடப்பது போன்ற சிந்தனை. குமுதினி பயந்து போனாள். தனியாய் விழித்திருக்க பயந்துப்போய் கட்டிலில் துாங்கிய சித்திராவை எழுப்பப் போனாள். அவள், யோகித்தனமாக பேசிய ஆறுதலை மீண்டும் கேட்க வேண்டும் என்று ஒரு ஆவல். ஆனாலும், பலமாக மூச்சு விட்டுத் துங்கும் தோழியை அப்போதைக்கு கமைதாங்கியாய் ஆக்குவதற்கு அவள் மனம் கேட்கவில்லை. இறுதியில், அவளோடு சேர்ந்து ஒட்டிப் படுத்துக் கொண்டாள். அவள் கையை, தன் இடுப்போடு கற்றி வளைத்துக் கொண்டாள். இந்த உளைச்சலில் இன்னோர் எண்ணம். பெற்றோரும் காசியும் இறந்திருந்தால் நான் உயிரோட இருக்கப் போவதில்லை. இருக்கவே மாட்டேன்.'