பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 க. சமுத்திரம் கய மரணச் சிந்தனை, குமுதினிக்குள் சிறிது ஆறுதலைக் கொடுத்தது. எந்தப் பிரச்சனைக்கும் மரணம் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது புரிந்தது. அவளுக்குத் துாக்கம் வரவில்லைதான். ஆனாலும் அவள் மரணத் திடத்தோடு படுத்தாள். பொழுது புலர்ந்தது. புல்லினங்கள் ஆர்க்கும் முன்னாலேயே குமுதினி எழுந்தாள். பத்திரிகைகள் வருகிற வரைக்கும், அவளால் காத்திருக்க முடியவில்லை. விடுதியை விட்டு வெளியேறியபோது ஏதோ கேட்கப் போன காவலாளியிடம் ஏற்கனவே செத்துப் போனவளுக்கு என்ன ஆனால், ஒனக்கென்னயயா? என்று கத்திவிட்டு, தன்னதனியாக நடந்தாள். பத்திரிகைகளை, எதிர்பார்த்து, திறக்கப்படாத கடைகளைப் பார்த்தபடி திறந்த விழியோடு நடந்தாள். நேற்று வரை விடுதிக்குள்ளேயே இரவில் நடமாட பயந்த அந்த இலங்கை தமிழ்க்காரி, இப்போது, தன் நடமாட்டமே பார்ப்பவர்களுக்குப் பயமூட்டும்படி ஓடினாள். தாவினாள். நடந்தாள். ஆங்காங்கே நின்று தேம்பினாள். எப்படியோ, எல்லாத் தமிழ் பத்திரிகைகளையும், ஆங்கிலப் பத்திரிகைகளையும் வாங்கியவளுக்கு, அப்போதுதான் காக கொண்டு வரவில்லை என்பது புரிந்தது. பத்திரிக்கைகாரப் பையனிடம் மன்றாடினாள். ஏற்கனவே தெரிந்தவன்தான். 'தம்பி! நான் இதோ இந்தச் செய்தி சொல்ற துரதிருஷ்டக்காரிப்பா.. அதோ அந்த விடுதியில் வந்து காக வாங்கிக்றியா? எனக்கு இவை எல்லாமே வேணும்.” "அதுக்கென்னம்மா நீங்க கொண்டு போங்க. நான் அப்புறமாய் வாங்கிக்கிறேன்.” குமுதினி, கை நிறையப் பத்திரிகைகளோடு நடந்தாள். படிக்காமலே நடந்தாள். உண்மையை எதிர்கொள்ள பயம். பின்னர், ஒரு சில இடங்களில் நின்று நின்று வாசித்தாள்.ஒரு பத்திரிகையில் வந்தது இன்னொரு பத்திரிகையில் பொய்யாகட்டும் என்ற பொய்