பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்க முடியாத கதை 6? மனப்பான்மையுடனேயே படித்தாள். நூற்றுக் கணக்கான இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவ பலத்தோடு சிங்களவர்கள் குத்திப் போட்டதும், வெட்டிப் போட்டதும், கற்பழித்ததும் நிருபணமாயின. விடுதிக்குள் எப்படித்தான் வந்தாளோ. நடப்பது தெரியாமல் நடந்து, தன் அறைக்குள் வருவது தெரியாமல் வந்து கட்டிலில் விழுந்தாள். சித்திரா, அப்போதும் அவளுக்கு ஆறுதல் சொன்னாள். குமுதினி கரணையற்றுக் கட்டிலில் விழுந்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்லப் போன சித்திரா நிதானப் பட்டாள். 'அழட்டும், நல்லா அழட்டும். மனத்தின் சோகக் குவியல்கள் கண்ணிரில கரையட்டும். விம்மலோடு விம்மலாய் வெடித்து வெளிக் கிளம்பட்டும்.' மூடிய கண் திறக்காமல், காலையிலிருந்து நண்பகல் வரை கட்டிலைக் கெளவிக் கொண்ட குமுதினியையே சித்திரா யோசித்தாள். இவளோட குடும்பத்தின் இப்போதைய நிலையை, எப்படி அறிவது? யாரிடம் கேட்பது? குமுதினி கண்ணற்றவளாய், கண் விழித்தாள். சித்ராவும், தமயந்தியும், குமுதினியை தாங்கிப் பிடித்து ஆட்டோவில் ஏற்றினார்கள். இலங்கைத் துணைத் துதரகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே பலத்த போலீஸ் காவல். அவர்களை உள்ளே விட மறுத்தார்கள். கெஞ்சிப் பார்த்தும் மிஞ்சிப் பார்த்தும் பலன் இல்லை. வெளியே வந்த காருக்குள் இருந்த அதிகாரியைப் பார்த்து குமுதினி கையெடுத்துக்குெம்பிட்டாள். ஓராண்டுக்கு முன்பு, முதல் தடவையாக இந்த அலுவலகம் வந்தபோது, சொந்தவீடாய்த் தோன்றிய அந்த மாளிகை, இப்போது அந்நியமாய்க் காட்டியது. ஆனாலும், குமுதினி அந்த அதிகாரியிடம் மன்றாடிக் கேட்டாள். "என்னை ஞாபகம் இருக்குதா அய்யா? இந்த அலுவலகத்துல பண்பாட்டு விழாவிலேய பாடியவள். இப்போ என்னோட குடும்பம் கொழும்பில் எப்படி இருக்கு என்று சொல்ல முடியுமா?"