பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 க. சமுத்திரம் காருக்குள் இருந்தவர், டிரைவரை உகப்பினார். கார் பறந்தது. தன்னையறியாமலே காரின் முன்னால் ஒடிய குமுதினியை, சத்திரா தாங்கிப் பிடித்தாள். அவளை தமிழ்ப் புலி யாக நினைத்த ஒரு காவலாளி மேல் புலிப் பார்வையை வீசினாள். பிறகு, சித்திராவையும், தமயந்தியையும் மார்பின் இரு பக்கமும் சேர்த்தபடி, அங்கேயே தவம் கிடந்தாள். தகவல் கிடைக்கவில்லை. தகராறுகள் கிடைத்தன. இறுதியில் குமுதினிதான் தோழிகளை, உஷார் படுத்தினாள். "என்னோட பெயரைத் தெரிஞ்சு ஒருவேளை இன்னும் உயிரோட இருக்கிற என் குடும்பத்தை அழிச்சிடப்படாது. வா." நான்கு நாட்கள் குமுதினிக்கு விநாடி விநாடியாய் கழிந்தன. ஒவ்வொரு விநாடியும் உயிர்மரணப் போாரட்டம். மாணவக் கொந்தளிப்பை தாங்கும் வகையில் கல்லூரிகள் மூடப்பட்டன. திருமணமாகப்போகும் சித்திரா,குமுதினிக்காக இசகு பிசகாய் எதுவும் செய்து, மாட்டிக் கொள்ளக் கூடாதே என்று பயந்து, அவள் தந்தை விடுதியிலிருந்து அவளை வலுக்கட்டாயமாகக் கூட்டிக் கொண்டு போய்விட்டார். தனித்து விடப்பட்ட குமுதினியின் புலம்பல் ஒடுங்கியது. அழுகை அகன்றது. உணர்வால் செத்துப் போனாள். சோகத்தால் மரத்துப் போனாள். கைப்பணம் போய்விட்டது. எங்கேயாவது போய் விவரம் கேட்க வேண்டுமானால், பணம் வேணுமே. குப்புறக் கிடந்தவள், விம்மல் சத்தம் கேட்டுக் கண் விழித்தாள். தந்தையோடு வந்த மணப்பெண் சித்திரா தரையில் மண்டியிட்ட படி, அவளையே பார்த்து அழுதாள். அழவேண்டியவள், அழுபவளுக்கு ஆறுதல் சொல்பவள்போல, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். சித்திரா, நான்கைந்து நூறு ரூபாய் நோட்டுகளை அவளிடம் நீட்டிவிட்டு, தன் கையில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றியபோது, "ஒனக்குப் பணம் வந்திருக்காது. வேற வழியில என்னால் உதவவும்முடியலே. அதனாலதான்.” என்று இழுத்துப் பேசினாள். -