பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்க முடியாத கதை 63 குமுதினி, ரூபாய் நோட்டுகளை வாங்காமலே, தன் உள்ளங் கையில் திணிக்கப்பட்ட மோதிரத்தை மெளனமாக நின்ற சித்திராவின் விரலில் மாட்டியபடியே, அரட்டினாள். "இது என்னோட அன்பைக் காட்டுகிற சின்னம். கொடுத்த அன்பைத் திருப்பித் தரலாம். அன்பே வேண்டாமுன்னு இதைத் தரலாமாடி? என் கல்யாணத்துக்குத் திருப்பிப் போடணுமேன்னு நினைக்கிறியா? அப்படி ஒரு நிலைமை வராது.டி. தாரதாய் இருந்தால், இந்தப் பாவிக்கு அன்பை மட்டுமே தாடி, அன்பு உருவமற்றது. மோதிரம் உருவம் உள்ளது.” சித்திரா, குமுதினியைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். விலகி விலகிப் போன அவள் முகத்தைத் தன் தோளில் கவிழ்த்துக் கொண்டாள். குமுதினியின் பிடரியில், சித்திரா சிந்திய கண்ணிர் பெருக்கெடுத்தது. இரண்டு நாட்கள் மேலும் ஓடின. குமுதினி, அறைக்குள்ளேயே முடங்கிவிட்டாள். காலத்தை மறந்த புலனற்ற நிலை. சொல்லவும் முடியாத, சொன்னாலும் தீராத அவலத்தையே உணவாகக் கொண்ட உள்ளத்தின் ஒடுங்கிய நிலை. விடுதி வெறுமையாய்க் கிடந்தது. எவளோ ஒருத்தி வந்து, ராமேகவரத்துக்குப் பாதிக்கப்பட்ட தமிழர்கள், கப்பலில் வந்து இறங்குவதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்றைப் படித்துச் சொன்னாள். குமுதினிக்கு லேசாய் உணர்வு தட்டியது. ராமேசுவரம் போய்ப் பார்க்கலாம். பணத்துக்கு? புத்தகங்களைக் குடைந்து, பெட்டியைக் குடைந்தவளுக்கு எப்போதோ வைத்திருந்த இருநூறு ரூபாய் கிடைத்தது. எழும்பூர் ரெயில் நிலையத்தைப் பார்த்து ஓடினாள். ராமன் தொழுத பூமியான ராமேஸ்வரம், இப்போது இரத்த அலைகளாய் விம்மியது. ஆயிரக்கணக்கான மக்கள் எதிர் கொண்டழைக்க, கப்பலில் வந்திறங்கிய அகதிகளை, குமுதினி, ஒடி