பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. க. சமுத்திரம் ஒடிப் பார்த்தாள். ஒவ்வொருவராய்ப் பார்த்தாள். தெரிந்த முகம் எதுவும் தென்படவில்லை. எவரிடமாவது கேட்கலாம் என்றால், ஒவ்வொரு முகமும் செத்துத் தொங்கியது. அந்த முகங்களைப் பார்க்கப் பார்க்க, அவர்களின் கமையையும், தான் வாங்கிக் கொண்டதுபோல் அவள் உள்ளம் கனத்தது. அதே சமயம் தனது இழப்புத் தாங்கிக் கொள்ளக் கூடியது போலவும் தோன்றியது. சென்னை திரும்பிய குமுதினி, யார் மூலமாவது, தன் குடும்பத்து நிலைமையை உணர்ந்த பிறகே, ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தாள். அவர்கள் இருந்தால் இருக்கலாம். இறந்தால் இறக்கலாம். மீண்டும் தன்னந்தனியாய், இலங்கைத் துணைத் துாதரகம் போனாள். அவளை உள்ளேயே விடவில்லை. விரக்தியோடு திரும்பியவள், தமிழக அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பார்த்தாள். அத்தனைபேரும் ஆறுதல் சொன்னார்கள். அறிந்து சொல்வதாய் இதய கத்தியோடு பதிலளித்தார்கள். ஒரிரு நாட்கள், அவளுக்குக் கொலைகார நாட்களாய் ஒடின. அறையே சிறையாகியது. தமிழ் ஐக்கிய முன்னணிப் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம்,சென்னைக்குவந்திருப்பதாக வானொலி கூறியது. குமுதினி லேசாய் உயிர்த்து எழுந்தாள். அந்த இலங்கைத் தமிழ்த் தலைவரைச் சந்தித்தாள். அவரோ, ஒட்டு மொத்தமாய் அத்தனை தமிழர்களுக்குமாக அழுது கொண்டிருந்தார். அவள், அவரிடம் தன் நிலையை எடுத்துச் சொன்னபோது, "பக்குவமாய், விசாரிச்சுப் பார்க்கேன். ஒருவேளை நான் விசாரிக்கிறதாலேயே ஒன் குடும்பத்தினர் பழி வாங்கப் படாமல் இருக்கணும். எதற்கும் விபரத்தை எழுதிக் கொடு” என்றார். குமுதினி, எழுதிக் கொடுக்காமல் நழுவி வந்தாள். 'செத்திருந்தால் இந்நேரம் செத்திருப்பார்கள். எனக்குத் தகவல்