பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்க முடியாத கதை 65 வேண்டும் என்பதற்காக ஒரு வேளை உயிரோடு இருந்து, அவர்களுக்கு, நானே எமனாகப் படாது. பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. நல்லபடியாகப் பொன் பொருளோடு வேண்டாம். கைகால் கதியாய் இருந்தால் போதும்.' குமுதினி, விடுதிக்குள் வந்து, உடல் முழுவதையும் மூடிக் கொண்டாள். “இன்னுமா துாக்கம்? என்று அம்மா போர்வையை விலக்குகிறாள். "ஏன் அழுக்குப் பேர்வையைப் போத்தியிருக்கே?" என்று அப்பா, கேட்கிறார். "ரூபாவானில ஒரு நல்ல நிகழ்ச்சி” என்று தங்கை ஞாபகப்படுத்துகிறாள். சென்னையில் இருந்து என்ன வாங்கிட்டு வந்தே?” என்று தம்பி கேட்கிறான். இவர்கள் எல்லாருக்கும் எதையோ பதிலாகச் சொல்லிவிட்டு, குமுதினி, புரண்டு படுக்கிறாள். போர்வையால் மீண்டும் உச்சிமுதல் உள்ளங்கால் வரை மூடிக் கொள்ளப் போகிறாள். திடீரென்று பேர்வை இழுக்கப்படுகிறது. காசிநாதன் சிரித்தபடி, "எனக்கும் போர்வை” என்கிறான். குமுதினி அலறியபடியே எழுந்தாள். அவள் சத்தம் கேட்டு யாரும் வரவில்லை. விடுதியே வெறிச்சோடிக் கிடந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். ஓடாமல் கிடந்தது. நேரத்தை அறிவதற்காக, வானொலிப் பெட்டியைத் திறந்தாள். கொழும்பில் இருந்து, விமானத்தில் தமிழர்கள் சென்னைக்கு வருவதாக, வானொலிச் சேதி கூறியது. குமுதினி எழுந்தாள். ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்துவிட்டாள். குடும்பத்தினர் கண்டிப்பாக வருவார்கள் என்று மனம் கணக்குப் போட்டது. அப்பாவுக்குத் தெரியாத அதிகாரிகளே இல்லை. பணத்துக்கும் பஞ்சம் இல்லை. கண்டிப்பாக வருவார்கள். ஒருவேளை, காசிநாதனும் அவர் குடும்பத்தினரும் வரலாம்; வர வேண்டும். விமானம் ஆகாயத்தை வட்டமடித்தபோது, அவள் குதிகால்களை உயர்த்தி உயர்த்திப் பறக்கப் போகிறவள் போல்