பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 க. சமுத்திரம் எழும்பினாள். விமானம் இறங்கியது. குமுதினி, ஒடினாள். பாதுகாப்புத் தடையையும் மீறிப் போனாள். அதற்குள் விமானத்திலிருந்து ஒவ்வொருவராய் இறங்கினார்கள். நளினி, தலையைத் துக்கிப் பார்த்தாள். தன் முன்னால் நின்றவர்களைப் பலவந்தமாய் விலக்கிப் பார்த்தாள். அப்பா மாதிரி தோணலயே. அம்மா மாதிரி தோணலயே? அதோ அப்பா என்னேடாட அப்பா. அப்பா, அப்பா, அப்பா இதோ இருக்கேன், இதோ இருக்கேன்.” கூவிய குமுதினியின் குரல் உடைந்தது. வந்தவர் அப்பா மாதிரிதான். பார்த்தவர்களில், எவரும் அவளுக்குத் தெரிந்தவராய் தெரியவில்லை. அப்போதும் ஒரு ஆறுதல். குடும்பத்தினர் அகதி முகாம்களில் இருக்கலாம். ஒருவேளை வீட்டிலேயே இருக்கலாம். இல்லையானால், அவர்கள் தப்பியோடி வட மாகாணங்களில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களில் இருக்கலாம். திரிகோணமலையில் திரியலாம். கிழக்குப் பகுதியான மட்டக்களப்பில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கலாம். விரக்தி வாய்ப்பட்ட வடிவோடு, அவள் திரும்பியபோது, திடீரென்று ஒரு குரல். திரும்பினாள். யார் என்று அடையாளம் பிடிபடவில்லை. அப்புறந்தான், தந்தையின் தொழிற்சாலையில் சூட்டும் போட்டும் போட்ட அதே அருணாசலம்,இப்போது தாடியும், மீசையும், ஒட்டிப்போன வயிறோடு, உலர்ந்து போன கண்களோடு நிற்பது தெரிந்தது. அந்த முதியவரின் கையைப் பிடித்தபடி, அவள் விம்மினாள். அவர், தம் கமையை எடுத்து அவள் தலையில் இறக்கினார். "எல்லாம் முடிந்தது. எல்லாமே முடிந்தது. கொழும்புல அப்பா காரில் ஏறினார். தொலைவில் வந்த பழக்கப்பட்ட சிங்களவர்களைப் பார்த்து, அப்பாசிரித்தபடிநின்றார்.நம் கம்பெனியில் கடனுக்கு சரக்கு வாங்குபவர்கள்தான். அப்பாவைப் பார்த்துவிட்டுப் பாய்ந்தாங்க. அப்புறம் அவர் தலை கீழே விழுந்தது. அதோடு விடலை பிணத்தைக் காரிலேயே தூக்கிப் போட்டபடி போனாங்க. ஒங்க வீட்டைப்