பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்க முடியாத கதை 67 பார்த்து ஒட்டினார்கள். அப்போ என்னோட குடும்பமும், ஒன்னோட தம்பி பிறந்த நாளை கொண்டாடுறதுக்காக ஒங்க வீட்டுக்குப் போயிருந்தாங்க.எல்லாருக்குமே அது இறந்தநாளாய் ஆயிட்டும்மா. ஒருவர்கடடத் தேறலம்மா. அதோட அவங்க விடலேம்மா. நம்ம தொழிற்சாலையையும் தரை மட்டமாக்கிட்டாங்க. என் தலைவிதி, நான்தான் தப்பிச்சேன். இலங்கையில் நம்ம ஆட்களுக்கு நடந்த கொடுமைகளை, வார்த்தைகளாலே வர்ணிக்க முடியாதும்மா” குமுதினி, கல்லானாள். மரமானாள்; அவளை பார்த்தபடி, நின்ற அருணாசலத்திடம், ஓர் அதிகரி வந்து, "நாங்க ஏற்பாடு செய்திருக்கிற முகாமுக்கு வாரிங்களா? இல்ல, இந்த அம்மாவோட போரீங்களா?” என்றார். அருணாசலம் குமுதினியையே பார்த்தார். குமுதினியின் உடம்பு லேசாய் அதிர்ந்தது. நான் இனிமேல் இருக்கப் போறதில்லை. இவரும் என்னோடு வந்து என் மரணத்துக்கு இடையூறாக இருக்க வேண்டாம்.' கல்லான நெஞ்சோடு அவள் பதிலளித்தாள். "இவரை முகாமுக்கே அனுப்புங்க”. அருணாசலம், பிரிய மனம் இல்லாமல் பிரிந்தார். குமுதினி, தன்னந்தனியாய் நடந்தாள். மரத்துப் போன மனசோடு, செத்துப் போன சிந்தனையோடு, சாவதற்காக நடந்து கொண்டிருந்தாள். அருணாசலத்திடம், காசிநாதனைப் பற்றிக் கேட்காததுகூட, அவளுக்கு உறைக்கவில்லை. கிண்டியைத் தாண்டி, அண்ணாசாலை வழியாக, அவள் நின்று நின்றும், வேகவேகமாகவும் நடந்தாள். அவள் பார்க்காமலே பல காட்சிகள் அவள் கண்ணில் முட்டின. ஆங்காங்கே ஆர்பாட்டங்கள். அத்தனைபேர் உடைகளிலும், இலங்கையின் சோகத்தை உள்வாங்கும் கருப்புத் துணிகள், தொழிலாளர் ஊர்வலங்கள், பல்வேறு கட்சிகளின்