பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 க. சமுத்திரம் கவரொட்டிகள். பெண்களின் ஊர்வலங்கள், முக்கிய இடங்களில் உண்ணாவிரதங்கள், பாய்ந்து சென்ற வாகனங்களில் துக்கக் கொடிகள். 'இந்திய அரசே ராணுவத்தை, அனுப்பு என்ற முழக்கங்கள். அன்றாடப் பிழைப்புக்காரர்கள் கூட ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தாக்ள். அவர்களின் கரங்களில் போராளித் தனமான அட்டைகள், கண்களில், இலங்கயை எரிக்கப் போவது போன்ற அக்கினிப் பிழம்புகள். கொடும்பாவி எரிப்புகள். தானும் ஆடி, சதையும் ஆடி, தமிழகமே ஆடிப் போனதை, குமுதினி உள்வாங்கினாள். இலங்கைதமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள், ஊழி நடனம் ஆடுவது போல், அவள் பார்வைக்குப் பட்டது.பார்க்கப் பார்க்க, அவளுள் இனம் காண முடியாத ஓர் இன உணர்வு ஏற்பட்டது. 'இவர்கள் எல்லாம் யாருக்காக இப்படிச் செய்கிறார்கள்? இவர்கள் ரத்தம் ஏன் இப்படி துடிக்கிறது? இதுதான் இனம் என்பதோ? இதுதான் ரத்தபந்தம் என்பதோ? இவ்வளவு பெரிய தமிழ்க் குடுமபத்தில் நான் அனாதையா? எம்மவர்களுக்காக உடலாலும், உயிராலும் துன்பப்படும் இவர்கள் என் சோதர, சோதரிகள். என் அப்பன்கள், என் அம்மாக்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நான், இந்த இனத்தளத்தில்தான் நடமாடுகிறேன். ஓர் அப்பாவின் மரணத்தில் இதோ பல தாய் தந்தையரை பார்க்கிறேன். ஒரு சில குடும்பத்தின் மரிப்பில் ஐந்துகோடிப் போரைக் கொண்ட தமிழ்க் குடும்பத்தை தரிசிக்கிறேன். நான் அனாதையில்லை. தற்கொலை செய்து கொள்ளும் கோழையில்லை. இந்த மொழி என் தாய். இந்தத் தமிழகம் என் வீடு. இவர்கள் என் சோதரர், சோதரிகள். நான் சாக மாட்டேன். சாவுக்கும் போகமாட்டேன். இலங்கைக்கும் போகமாட்டேன். காசிநாதன் ஒருவேளை உயிரோடு இருந்தால், அவர் இங்கேதான் வரவேண்டும். எந்த தகவலும் தெரியாத காசிநாதனைவிட இப்போது என்னிடம் ஆறுதலுக்காக புலம்பிய பெரியவர் அருசணாசலமும், இங்கே, அகதிகளாக குவியும்