பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்க முடியாத கதை 69 இலங்கை தமிழர்களுமே எனக்கு அதிக முக்கியம். இவர்களுக்கு, ஒரு சேவகியாக இருப்பேன். சேவிப்பேன். தனி வாழ்வில் செத்து, பொது வாழ்வில் பிழைத்த குமுதினி, ஆர்பாட்டக்காரர்களையும்,உண்ணாநோன்புகொண்டவர்களையும் கையெடுத்துக் கும்பிட்டாள். வேகவேகமாக நடந்தாள். அருணாசலம் அகதி முகாமுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, அவரைத் தன்னோடு அழைத்துக் கொள்வதற்காக வேக நடையாய் நடந்தாள். உயிரோட்டமாய், உணர்வோட்டாய் ஓடினாள். கலைமகள் (தீபாவளி மலர்) -1990 o *్మ•