பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பாகை பராபர பரம்பெருளாய், ஒரு கடலே, முக்கடலாய், முக்கடலே ஒருகடலாய் சங்கமிக்கும் கன்னியா குமரியில் இருந்து வடமேற்காய் ஐந்தாறுகல் தொலைவில் உள்ள சஸ்தா விளை, பூவண்டர் தோப்பாய் பெயர்மாற்றம் பெற்று, அந்தப் பெயரும் ரகசிய ரகசியமான பரம ரகசியமாய் சாமித்தோப்பு என்று அழைக்கப்பட்ட காலம். திருவாங்கூர் சமஸ்தான மன்னரும், இசை மேதையுமான கவாதித் திருநாள், சுசீந்திரம் தானுமாலயன் ஆலய வருகையை முன்னிட்டு, மேலே ஆகாய தோரணங்களாய் அகண்ட கொடைகள் விரிக்கப்பட்டு, தாராய் மினுங்கும் மேல்சாதி நெடுஞ்சாலை. இந்த ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் பிரதான சாலையில் கூடும் இடத்தில் தெருமறிச்சான்கள் பொருத்தப்பட்டு இருந்தன. வைக்கோல் புரியில் இடைவிடாது கட்டப்பட்ட வேப்பிலைக் கொத்துக்களைக் கொண்ட இந்த தடுப்பூத் திரை, குறுக்காக வழிமறித்தது. கீழ்சாதிக்காரர்கள், கோவிலுக்குள் போவது இருக்கட்டும், அந்த ஆலயத்தை கண்ணால்கூட பார்த்துவிடக் கூடாது என்பதற்காக நிரந்தரமாக வைக்கப்பட்டவை. இந்த மறிச்சான், உள்ளே நுழையும் மேல்சாதிக்காரர்களுக்கு ஒரு வருடல்... கீழ்சாதிகளுக்கோ, ஒரு துாக்குக் கயிறு. ஒன்றே இரண்டான கொடுமை. இப்படிப்பட்ட மேல்சாதி சாலையில் இருந்து, இந்த ஆலயத்திற்கு முன்பே ஒருகல் தொலைவில் ஒதுங்கியும் - ஒதுக்கப்பட்டும் போகும் மண் பாதை. கருவேல மரங்களின் வழி