பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பாகை 7| மறிப்பாலும், பயமுறுத்தும் கள்ளிப்புதர்களாலும் பிற்படுத்தப் பட்டும், பாதாள பள்ளக்குழிகளால் தாழ்த்தப்பட்டும் போன இந்தப் பாதை, தனது தகுதிக்கு ஏற்ற, அந்த குக்கிராமத்திற்கு, வளைந்தும், நெளிந்தும், பனைமரக் குவியல்களுக்கு வழிவிட்டும், கற்குவியல்களில் மறைந்தும், சமதளத்தில் மீண்டும் தன்னை போன்ற ஆட்களை அழைத்துச்சென்று கொண்டிருந்தது. இந்தப் பாதையில், ஆண்டிச்சியும், அவள் கணவன் கடலைமாடனும்,வேகவேகமாகஆங்காங்கே தென்பட்ட, இதரஏழை பாளைகளோடு, அந்தக் கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். ஆதரவு தேடும் அனாதைகளாய் கள்ளும், முள்ளும் காலுக்கு செருப்பாய் நடந்து நடந்து, சாமித்தோப்பின் நடுப்பகுதியின் எல்லையோரத்தில் குமைந்துகொண்டு நின்றார்கள். உடம்பில் வைரம் பாய்ந்தாலும், உள்ளத்தில் முருங்கை பாய்ந்ததுபோல், ஆறடி உடம்பை நான்கடியாய் கருக்கி, முட்டிக்கு கீழே போகாத மூன்றடி வேட்டியை ஈரடியாய் சுருட்டி, தன்பாட்டுக்கு நின்ற வீட்டுகாரனோடு, அந்தக் கொட்டடியின் வடக்கு வாசல் பக்கம் மொய்த்த கூட்டத்திற்குள் கலக்க முடியாமல், சிறிது தொலைவில் ஆண்டிச்சி நின்றாள். நடந்ததை நினைத்து கோபப்பட்டும், நடக்க போவதை நினைத்து அச்சப்பட்டும், அவள் கண்ணிரும் கம்பலையுமாய் துவண்டாள். அவள் விவரித்த அந்தக் கொடுமையைக் கேட்டும், நெருப்பு பற்றாத கணவனின் முகத்தை பார்க்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. இந்த இடத்திற்குகூட, அவள்தான், அவனைக் கூட்டி வந்தாள். அப்போதும் அவன் அந்த கூட்டத்திற்குள் போகத் தயங்குவதை பார்த்துவிட்டு, அவள், அவனை கோபங்கோபமாக திட்டினாள். அவன் முதுகை, கூட்டத்தை நோக்கி தள்ளி விட்டாள். அவனோ, அவளை ஒரு கற்று கற்றிவிட்டு, பின்பக்கமாய் நின்று கொண்டு, அவளை தள்ளி விட்டான். உடனே, ஆண்டிச்சி, அவனை அடிக்கப்போவதுபோல் கையை தூக்கிவிட்டு, பின்பு