பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சு. சமுத்திரம் அப்படி தூக்கிவிட்ட கைகளை உதறினாள், பின்னர், தனது தலையிலே அடித்துக் கொண்டாள். முட்டுக்கு கீழே அரையடி சென்ற சேலையை மேல்நோக்கி இழுத்து, மாராப்பு என்ற பேர்பண்ணி, இடுப்புக்கு மேலே தோள்வரை ஒன்றைச் சுற்றாய் கற்றி இருந்தாள். அவள் தலையிலும், தோளிலும் ஈரச் சொட்டுகள். ஈரம் காயாத, சின்னச் சின்ன மண்பானைச் சிதறல்கள். இடையிடையே சோற்றுப் பருக்கைகள். கருப்பும் அழகு என்ற இழிவும்மையை நீக்கி, கருப்பே அழகு என்னும்படியான ஏகார அழகுத் தோற்றம். புதுவைக்கு அருகே உள்ள வக்கிரகாளி அம்மன் காட்டு வளாகத்தில் உள்ள ஒருவகை மரங்கள், காலப்போக்கில் மரத்தன்மை போகாமலே, இரும்பாகிப் போனது போன்ற, பெண்மை இழக்காத கம்பீரமான உடல் வாகு. சுசீந்திரம் வளைவு பாலத்தில் இருந்து ஒருகல் கிழக்காவும், மூன்றுகல் வடமேற்காகவும் உடல் உபாதை இல்லாமல், மனோ வாதையுடன் ஒரடியை ஈரடியாய் அரைநாழிகையில் நடந்து முடித்த அவளால், அங்கே உள்ள நூறடி இடைவெளியை கடக்க இயலவில்லை. கண்நோக்கும் பார்வைகுள் சிக்கும் அந்தக் கொட்டடிக்கு முன்னால், மண்டி நிற்கும் ஆண், பெண் அத்தனை பேரும், கழுவிவிட்ட பளிங்கு கற்கள் போல் மினுமினுப்பாகவும், வெள்ளையும், சொள்ளையுமாகவும் காட்சி அளிப்பதை கண்டதும், அவள், தனது அழுக்குத் துணியை பார்த்தும், துளசி துரும்புகள், மண் துகள்கள் மலிந்த நிரம்பிய உடம்பை பார்த்ததும், கூடசிப் போனாள். நெருப்பால்கூட பற்றமுடியாத அளவிற்கு அழுக்கு படிந்த வீட்டுக்காரனின் வேட்டியை பார்த்தும் அவளுக்கு கோபமும் அழுகையும் போட்டிபோட்டு வாயிலிருந்தும், கண்களிலிருந்தும் வெளிப்படத் துடித்தன. 'அரகர அரகர சிவ சிவ அய்யா என்ற முழக்கம், அந்த கொட்டடி முன்னால் குவிந்த மனிதர்களிடமிருந்து ஒற்றைக் குரலாய் எழுந்தது. அங்கிருந்து கிளை பிரிந்து வெளிப்பட்ட