பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பாகை 73 மக்களிடம், குழுச் சத்தமாகவும், தனிச் சத்தமாகவும் கேட்டது. அரகர சிவசிவ என்ற புதுமையான-புரட்சியான முழக்கம் மாடன்களையும், மாடத்திகளையும் வணங்கும் அந்த மக்கள் அதுவரைக் கேட்டறியாத ஒரு அசாதரணமான சாதரண மந்திரம். கடலைமாடனையும்,முத்தாரம்மனையும் மனதுக்குள் இருந்து எடுத்துப்போட்டுவிட்டு, நின்ற, ஆண்டிச்சியும், அந்த சத்தத்தை உள்வாங்கினாள். அந்த முழு முழக்கத்தையும் அச்சரம்பிசகாமல் காது வழியாக உள்வாங்கி கட்புலனில் நிறுத்திக் கொள்ள, அவள் சிரமப்பட்டாள். ஆனாலும் அந்த சொற்றொடரின் முற்றுப்புள்ளிச் சொல்லே முதல் சொல்லாய் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் அய்யா' என்ற உச்சரிப்பு அவள் கண்களில் உப்பு நீரை கொட்ட வைத்தது. செயலற்று போய், ஒலைப் பாயில் ஒடுங்கி கிடக்கும், தன்னைப் பெற்ற சொந்த அய்யாவுக்கும் அய்யாவான ஒரு பேரய்யாவை காணத்துடிக்கும் தாக்கத்திலும், இயலாமையிலும், அவள், அரகர சிவ சிவ என்ற கூட்ட உச்சரிப்பு முடிந்து, அய்யா என்ற நாதப்பிரவாகம் துவங்கும்போது, என்னப் பெத்த அய்யா என்று சத்தம்போட்டே பிளிறினாள், அந்த உந்தலில், கூட்ட குகைகுள் கொலுவிற்றிருக்கும் வைகுண்டரை தரிசிக்க, பின் பாதங்களை தூக்கி, முன் பாதங்களில் நின்றாள். இரண்டு தலைகளுக்கு இடையே கண் துளைத்து, காவிக் கட்டிலில் சம்மணம்போட்டு உட்கார்ந்திருக்கும் அந்த உருவத்தை, எப்படியோ பட்டும் படாமலும் பார்த்து விட்டாள். உடனே உள்ளத்திற்குள் உறைந்துகிடந்த ஒருகோடி துயரங்கள், நூற்றுக்கணக்கான கண்ணிர் துளிகளாய் உருமாற்றம் பெற்று, வெளியே விழுகின்றன. தொண்டைகுள் சிக்கிய துக்கம், வாய் வழியாய் வார்த்தைகளாய் விழுகின்றன. 'என்னப் பெத்த அய்யா... எனக்கா இந்த நெலம?... இல்லாதவன் பொஞ்சாதி எல்லாருக்கும் மயினி என்கிற ஊர் கத என் கதயா ஆயிட்டே அய்யா. இங்கவந்து ஒம்மமகள கூட்டிட்டு போமுய்யா. அய்யா. என்னப் பெத்த அய்யா...'