பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. க. சமுத்திரம் ஆண்டிச்சி, கண்ணிரும் கம்பலையுமாய் கத்தினாள். அவளை ஆறுதலாய் பற்றப்போன கணவனை, ஒரு உதறு உதறினாள். அதனால், கண் நிறைந்த நீர்த் துளிகள் சொட்டு நீர் பாசனம்போல், அங்குமிங்குமாய் சிதறின. திடீரென்று, தனது கண்களை, மென்மையாக விலக்கிய கரங்களை முரட்டுதனமாக விலக்கியபடியே, ஆண்டிச்சி கண் திறந்தாள். நடுதர வயதில் ஒரு பெண்ணை பார்த்தாள். அவள் காதுகளில் ஆடும் பாம்படங்கள், ஆண்டிச்சியை வரவேற்பதுபோல் தோன்றின. எதிரே வந்து நின்றவள், அன்போடு வேண்டினாள். 'இங்க வந்துட்டா அழப்பிடாது. ஒன்ன அழவச்சவியதான் அழனும்' கணவன்கார சுடலை மாடனுக்கு, தனிமைத் துயரம் போய், ஒத்தாசைக்கு ஒரு தாய் கிடைத்த ஆறுதல். முதல் தடவையாகப் பேசினான். 'அம்மாவுக்கு எந்த ஊரு.? சாமிய பாத்து முடிச்சாச்சா. 'எனக்கு இந்த ஊருதான். என் பேரு திருமாலம்மாள். நான், அய்யாவோட அத்த மகள். ஊரல் வாய்மொழியில வாக்கப்பட்டு, புருசன பறிகொடுத்திட்டு. ரெண்டு பிள்ளியளோட திரும்புனவள். முத்துக்குட்டிக்கு எட்ட நின்னே சேவகம் செய்யுற பாக்கியம் எனக்கு கிடச்சிருக்கு..' 'முத்துக்குட்டின்னா. யாரும்மா...' 'நான் ஒரு பாதகத்தி. ஒண்ணாப் பழகுன பழைய நெனப்புல தெரியாத்தனமா அந்த நாராயண சொரூபத்த பழைய பெயரவச்சி சொல்லிப்புட்டேன்' தோள்தட்டும் சதைக் குழாயாய் பாம்படங்கள் தொங்கும் காதுகளோடும், கேள்விக் குறி கண்களோடும், நெற்றியில் ஒற்றை செம்மண் நாமத்தோடும், வெள்ளைப் புடவையோடும், கணவன் இறந்தாலும் கழுத்தில் மங்கல நானோடும் தோன்றிய