பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பாகை 75 திருமாலம்மாளை, ஆண்டிச்சி, ஆச்சிரியமாகப் பார்த்தபோது, திருமாலம்மாள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து விளக்கம் அளித்தாள். 'ஊரு உலகத்துல எல்லா சாதியிலயும் புருசமாரு இறந்துட்டா. பொண்டாட்டிமாரு தாலிய கழட்டனும். நகருட்டு போடப்புடாது. பூவையும் பொட்டையும் தொடக்கூடாதுன்னு. அந்தகாலத்துல இருந்தே வழக்கப்பட்ட இந்த காலத்துமுறைய, நம்ம நாராயண சொரூபம் மாத்திட்டாரு... 'புருஷன் செத்தாலும் பொட்டச்சுவதாலிய கழத்தப்படாது. மூளியாய் நிக்கப்படாதுன்னு' உபதேசம் செய்யுறாரு. இதனாலயே அவரு மேல எல்லாருக்கும் கோபம். ஆனா அவர ஒரு தடவ பாத்துட்டா அந்த கோவமே பயபக்தி ஆயிடும். நம்மசாமி அப்பேர்ப்பட்ட சாமி ஆண்டிச்சிக்கு எதையும் மாற்றிக் கொள்ளலாம் என்ற புதிய எண்ணம் ஏற்பட்டது.அந்தஎண்ணத்தாக்கத்தில்,திருமாலம்மாளிடம், தான் பட்ட பாட்டை சொல்லத் துவங்கினாள். 'ஒங்கள என் அம்மா மாதிரி நெனச்சி... இன்னிக்கி நான்பட்ட பாட்டையும், நாளைக்கு படப் போற பாட்டையும் சொன்னாத்தான் என் தல லேசாகும்மா... சொல்லட்டுமா புண்ணியவதி? 'எல்லாத்தையும் மொதல்ல. அய்யாகிட்ட சொல்லு. அப்புறமா நீ சொன்னதையும், அதுக்கு அய்யா சொன்னதையும், என்கிட்ட சொல்லு. இப்பவே சொல்லிட்டா. அப்புறம் அய்யாகிட்ட சொல்லும்போது ஒனக்கு வேகம் குறஞ்சிடப்படாது பாரு 'இந்த பன்னாட கோலத்தில எப்படிம்மா போறது? 'யாரு ஒன்ன இப்படி போகச்சொன்னது?. ஒன்ன மாதிரி. என்ன மாதிரி எளிய சனங்க ஊருகினத்துலயோ. குளத்துவயோ குளிக்கமுடியாம, மேல் சாதிக்காரனுவ தடுக்கான். சுசீந்திரம்