பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 க. சமுத்திரம் கோயிலையோ. பகவதியம்மன் முகத்தையோ பார்க்க முடியாம தெருமறிச்சான் வச்சி மறைக்கான். இதனாலதான், நம்ம அய்யா. பள்ளுப்பறை பதினெட்டு சாதியும். எந்த தடயும் இல்லாம குளிக்கதுக்கு முத்திரிக் கிணறு உற்பத்தி செய்திருக்காரு. நிழல் தாங்கலுன்னு கோயில்கள ஏற்படுத்தியிருக்காரு. நம்ம சனங்க ஆடுமாடுபண்ணிகளபலியிட்டு, அதுகளமாதிரியே ஆயிட்டுவாரத தடுக்கதுக்கு உயிர்பலி வேண்டான்னு உபதேசிக்காரு. பரம் பொருளுக்கு எதுவுமே தேவையில்லன்னு, அத ஒளி வடிவத்துல கும்பிட வைக்காரு. சரி சரி. நேரா முத்திரிக் கிணறு போயி, ரெண்டு பேரும் துணிமணிகளை கசக்கி துவச்சி குளிங்க நல்ல சமயத்தில வந்தீக. வெண் நீசனான வெள்ளைக்காரன் துணையோட கலி நீசனான திருவாங்கூர்மவராசவோடபட்டாளத்துசிப்பாய்பயலுவ அய்யாவவதைசெய்து சிறைசெய்துவிலங்குபோட்டு, அடிஅடின்னு அடிச்சி இழுத்திட்டு போவும்போது, அந்த முத்திரிக் கிணரையும், முழுசா உப்புபோட்டுமூடிட்டானுவ.போன வாரந்தான் கிணறகத்தி செய்தோம். சீக்கிரமா போயி குளிச்சி முடிச்சி, ஈரத் துணியோட அய்யாமுன்னால போயி நில்லுங்க.ஒங்களுக்குவிமோசனம்தானா வரும்' திருமாலம்மாள், தான் நிற்பது வரைக்கும் அவர்கள் போகமாட்டார்கள் என்ற அனுமானித்ததுபோல், சிறிது விலகிப்போய் நின்று கொண்டு, அவர்களை போகும்படி வலது கையை ஏற்ற இறக்கமாய் ஆட்டிக் காட்டினாள். உடனே, அந்தப் பக்கமாய் அரகர சிவ சிவ அய்யா என்று ஒதிக்கொண்டே சென்ற கூட்டத்தோடு ஆண்டிச்சியும், கடலை மாடனும் சேர்ந்து கொண்டார்கள். முக்கால் கல் தொலைவில் உள்ள எண்கோண கிணற்றைச் கற்றி மனிதச்சுவர்களான எளிய சனங்கள், ஆண்,பெண் வித்தியாசம் இன்றி, தோண்டிப்பட்டைகளின் நடுப்பக்கம் உள்ள பூவரசு கம்புகளின் மேல் கட்டப்பட்ட கயிறுகளை கிணற்றுக்குள்விட்டு நீரை மொண்டு மொண்டு தலையில் ஊற்றினார்கள். ஒலை