பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பாகை 77 குடிசைகளில் செருவை எனப்படும் பனைவோலை வேயப்பட்ட ஒதுக்குப்புறத்தில், மண் பானையில் உள்ள அரைகுறை தண்ணிரை, சிறட்டைகளில் மோந்து, காசை செலவளிப்பது போல், சிறிது சிறிதாய் ஊற்றிக் கொள்கிறவர்கள், அப்போது தண்ணிரை வெள்ளமாக உடம்பெங்கும் வியாபிக்கவிட்டார்கள். ஆனாலும் ஒரு பெரியவர்.'அஞ்சி தோண்டிப்பட்டைகளுக்கு மேல ஊத்தப்படாது. குளிச்சதும் ஒடிடப்படாது. தோண்டிப்பட்டை தண்ணிய அஞ்சி தடவ உள்ளங்கையில ஊத்தி குடிக்கணும். அஞ்சி தடவ அரகர சிவ சிவ அய்யான்னு சொல்லணும். அய்யா நமக்கு கொடுத்திருக்கிற எல்லாமே அஞ்சு என்கிறது ஏழை மக்களோடு பஞ்சாட்சரம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற ஐம்புலன்கள். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்கள். இந்த நெனப்போட குளிக்கனும் என்றார். தும்பைப் பூ வேட்டியோடு பாகவத தலையோடு தோற்றம்காட்டிய அந்தப் புலவரை, சிறுவர்கள் சிறிது விசனமாகப் பார்த்தார்கள். ஆறுமாதமாக குளிக்காத உடம்பில் ஐந்து தோண்டிப்பட்டை தண்ணிர் தலைக்கு மட்டுமே போதாது. ஆகையால் அந்த சிறுவர்கள் தோண்டிப்பட்டை எண்ணிக்கை வரம்புகளை மீறி, குளித்துக்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த வாலிபர்களும், இளம்பெண்களும் தங்களோடு வந்த முதியவர்களுக்கு தெரியாமல் கிணற்றின் ஒவ்வொரு கரைக்கும்ப்போய் ஐந்தந்து பட்டைகளாக அள்ளி அள்ளி உடம்பில் படர விட்டார்கள். அதே சமயம் இப்படி குளிக்க வைத்த வைகுண்டரை நினைத்து அரகர சிவ சிவ அய்யா என்ற நாதத்தை ஐந்து தடவைக்கு மேலேயே ஒலி க்கவிட்டார்கள். ஆண்டிச்சியும், கடலை மாடனும், ஒரு உபகாரி கொடுத்த தோண்டிப்பட்டையால் குளித்து முடித்து, கட்டிய துணியையும் உடலோடு சேர்த்து கசக்கினார்கள். அவர்கள் உடம்பு, கல் போலவே இருந்ததால், அந்த துணிகளும் கல்லில் உரசப்