பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 க. சமுத்திரம் பட்டவைபோல் வெளுத்துவிட்டன, பின்னர், உடம்புகளை காட்டிக் கொண்டிருந்த ஈரத்துணி, அதே மேனிகளை மறைக்கும் அளவிற்கு லேசாய் காய்ந்தபோது, அவர்கள் கூட்டப்பதியை நோக்கி திரும்பினார்கள். எல்லோரையும் போல், அவர்கள் உடம்பிலும் ஒரு மினுக்கம். நடையில் ஒரு வேகம். சுத்தம் ககம் தரும். என்பதை சொல்லாமல் சொல்லும் முத்திரிக்கினரை மாறி மாறி திரும்பி கைக் கூப்பியபடியே ஒருவர் கரத்தை இன்னொருவர் பற்றிக் கொள்ள மனச்கமை குறைந்த தெம்பில் நடந்தார்கள். அந்தக் கொட்டடியின் வடக்கு வாசலில் தொடர்ந்து கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. ஆனாலும் புதிய வரவுகளுக்கு வழிவிடும் வகையில், நான்கடி அகல, நீள வாக்கிலான இடைவெளியும் இருந்தது. ஈரத் துணிக்காரர்கள், வரிசை வரிசையாக போய்க்கொண்டிருந்தார்கள். இவர்களில் பலர் கூட்டத்தில் சங்கமித்தனர். சிலர், மனித வேலி கொண்ட அந்த பாதை வழியாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். வரிசை வரிசையாக வந்து காய்ந்து போன ஈரமக்களை தள்ளியும் அவர்களால் தள்ளபட்டும், ஆண்டிச்சியும், கடலைமாடனும், வைகுண்டரை பார்க்கும் தொலைவிற்கு வந்துவிட்டார்கள். வழக்கமான, நான்கு கால் கட்டிலிற்குப்பதிலாக, ஆறுகால் கட்டில்... அதன்மேல் ஒரு காவிப் போர்வை. காவியுடுத்த வைகுண்டருக்கு நாற்பது வயது இருக்கலாம். நெற்றியில் செம்மண் நாமம் கால்மேல் காலடக்கி உட்கார்ந்திருந்தார். பார்க்கப் பிராயமுமாய், படுக்க கிழவனுமான ஒருவித அத்வைத தோற்றம். சிறுபிராயத்தில் மல்யுத்த, சிலம்பு பயிற்சிகளில் ஈடுப்பட்டதைக் காட்டும் பரந்த மார்பும், ஒரு காளையின் திமில் போன்ற தோள்களும் கொண்ட திருவுருவம். கண் நிறைந்து. அதே சமயம் கண்ணுக்குள் சிக்காத தோரணை. அவரைச் சுற்றி நிற்கும் அத்தனை பேருக்கும் விதவிதமாய், பேருக்கு மட்டுமே காட்டும் மாயத்