பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 க. சமுத்திரம் ரட்சிக்கணும்-அய்யாபொறுமை தரணும்-அய்யா, நாங்கள் ஒண்ணு சொன்னது, ஒண்ணு கேட்டு என்று இருதடவை சொல்லிவிட்டு, மீண்டும்,'ஒண்ணுக்கு ஒண்னு நிரப்பாக இருக்கணும்-அய்யாநல்ல புத்தி தரணும் - அய்யா அன்னமும் வஸ்த்திரமும் தரனும் - அய்யா வச்சிரட்சிக்கணும்-அய்யா எங்களை யாதொருநொம்பலமில்லாமல் - யாதொரு சஞ்சலமில்லாமல் அய்யா வச்சிரட்சிக்கணும் என்று பொதிப்பு (பிரார்த்தனை) செய்தார்கள். குனிந்த தலை நிமிராமல், தருமம் தலை கவிழ்ந்ததுபோல் நடந்த ஆண்டிச்சி, வைகுண்டரின் முன்னால், தான் நிற்பதைப் பார்க்கிறாள். அவரைப் பார்க்கக் பார்க்க கண்கள் குளமாகின்றன. அவர் தனது தந்தையைப் பெற்ற தாத்தா போல ஒரு காட்சிமை. ஒரு தடவை, ஒரு மேல்சாதி சிறுவன், தன்னை கிண்டல் செய்ததை அந்த தாத்தாவிடம் அழுதபடியே அவள் முறையிட்டதும், உடனே அந்த தாத்தா பின் விளைவுகளைப் பற்றி கவலைப் படாமல், எக்காளமாய் நின்ற அந்தச் சின்னப் பயலின் காதுகளை திருகியதும் நினைவுக்கு வருகிறது. உடனே, பயப்பிராந்தியின் கரைகள் உடைவதுபோல் தோன்றுகிறது. வைகுண்டர் முன்னால் வந்தததும் கண்ணிர் மழையாய் வாய்வெளி இடியாய் கொட்டுகிறது. 'அய்யா.என்னப்பெத்த அய்யா.நான்பட்டயாட்டகொஞ்சம் கேக்கணும் அய்யா. செத்த நேரத்திற்கு முன்னால, வடகரைக்கு பக்கத்திலுள்ள தேரூர்ல. இருந்து, தலையில கஞ்சிப் பானையை வச்சிக்கிட்டு, கூலி வேலைக்கு போறதுக்கு வயக்காட்டு பக்கமா வழக்கம்போல நடந்தேன். அப்போ எங்க ஊரு வலிய கணக்கெழுத்து என்னை வழிமறிச்சான்.கையிலவச்சிருக்கிற நடைக்கம்ப என்மார்புக்கு நேரா நீட்டி, அய்யோஅய்யயயோ. அந்த அக்கிரமத்த என் வாயல எப்படி சொல்லுவேன்.' ஆண்டிச்சி, திடீரென்று தரையில் குப்புற விழுந்து வைகுண்டரின் பாதங்களை கண்ணிரால் கழுவிக்கொண்டிருந்தாள்.